என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தமாகா மாவட்ட தலைவர் வி.என்.வேணுகோபால் இல்ல திருமண வரவேற்பு விழா- ஜி.கே.வாசன் பங்கேற்று வாழ்த்தினார்
    X

    தமாகா மாவட்ட தலைவர் வி.என்.வேணுகோபால் இல்ல திருமண வரவேற்பு விழா- ஜி.கே.வாசன் பங்கேற்று வாழ்த்தினார்

    • திருமண வரவேற்பு விழாவில் தாம்பரம் பகுதியை சேர்ந்த 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
    • திருமண வரவேற்பு விழாவை தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே. வாசன் தலைமை தாங்கி நடத்தி வைத்தார்.

    சென்னை:

    தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் காஞ்சி வடக்கு மாவட்ட தலைவர் வி.என். வேணுகோபால் தாம்பரம் மாநகராட்சி 60-வது வார்டு உறுப்பினர் கீதா வேணுகோபால் ஆகியோரின் மகன் டாக்டர் வி விஷால் திண்டுக்கல் மாவட்டம் பி லட்சுமி ராஜா-கிருஷ்ணவேணி ஆகியோரின் மகள் டாக்டர் எல் லட்சுமி நிவேதா திருமண வரவேற்பு விழா சென்னை திருவான்மியூர் ஸ்ரீ ராமச்சந்திரா கன்வென்ஷன் சென்டரில் நேற்று மாலை நடைபெற்றது

    திருமண வரவேற்பு விழாவை தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே. வாசன் தலைமை தாங்கி நடத்தி வைத்தார்.

    திருமண வரவேற்பு விழாவில் பீட்டர் அல்போன்ஸ், விடியல் சேகர், தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ். ஆர். ராஜா அ.தி.மு.க. மாவட்டச் செயலாளர்சிட்லபாக்கம் ராஜேந்திரன், முன்னாள் அமைச்சர் சின்னையா, தாம்பரம் மாநகராட்சி மேயர் வசந்தகுமாரி, துணை மேயர் குரோம் பேட்டை கோ.காமராஜ், முன்னாள் எம்.எல்.ஏ. தன்சிங், தொழில் அதிபர் நல்லி குப்புசாமி செட்டியார், தமிழ் மாநில காங்கிரஸ் மாநில மாவட்ட நிர்வாகிகள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    திருமண வரவேற்பு ஏற்பாடுகளை தமிழ்மாநில காங்கிரஸ் நிர்வாகிகள் கே. எஸ்.பி.லோகசுப்ரமணியம், பொன்ராஜ், ஆனந்த், கந்தசாமி உள்ளிட்ட நிர்வாகிகள் செய்திருந்தனர்

    திருமண வரவேற்பு விழாவிற்கு வந்தவர்களை த.மா.கா. மாவட்ட தலைவர் வி.என்.வேணுகோபால் தாம்பரம் மாநகராட்சி உறுப்பினர் கீதா வேணுகோபால், மனிஷ் வேணுகோபால் ஆகியோர் வரவேற்றனர்.

    திருமண வரவேற்பு விழாவில் தாம்பரம் பகுதியை சேர்ந்த 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×