என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  பெற்றோர் திட்டியதால் வீட்டில் இருந்து வெளியேறிய சென்னை மாணவன் திண்டிவனம் ரெயில் நிலையத்தில் மீட்பு
  X

  பெற்றோர் திட்டியதால் வீட்டில் இருந்து வெளியேறிய சென்னை மாணவன் திண்டிவனம் ரெயில் நிலையத்தில் மீட்பு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • வழக்கம் போல பள்ளிக்குச் சென்ற அப்துல் வாசித் வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை.
  • மாணவன் மாயமானது குறித்து ரெயில்வே உதவி ஆய்வாளர் ஜீவானந்தம் விசாரணை செய்தார்.

  திண்டிவனம்:

  சென்னை தண்டையார்பேட்டை நேதாஜி நகர் பகுதியை சேர்ந்தவர் முகமது மூசா. இவரது மகன் அப்துல் வாசித். இவர் அதே பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார்.

  வழக்கம் போல நேற்று காலை பள்ளிக்குச் சென்ற அப்துல் வாசித் வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதையறிந்த பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடி வந்தனர்.

  இந்த நிலையில் இன்று அதிகாலை திண்டிவனம் ரெயில் நிலையத்தில் சென்னையில் இருந்து வந்த ரெயிலில் வந்த அப்துல் வாசித்தை பிடித்து இரும்பு பாதை ரெயில்வே போலீசார் விசாரணை செய்தனர்.

  அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்ததால் அவரை இரும்பு பாதை ரெயில் நிலையத்திற்கு அழைத்து வந்து இரும்புப் பாதை காவல் உதவி ஆய்வாளர் ஜீவானந்தம் விசாரணை செய்தார்.

  பின்னர் சைட்லைன் ஒருங்கிணைப்பாளர் லட்சுமிபதிக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து சென்னையில் உள்ள அப்துல் வாசித்தின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்து அவரின் பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

  இதுகுறித்து ரெயில்வே உதவி ஆய்வாளர் ஜீவானந்தம் விசாரணை செய்தார். விசாரனையில் படிப்பில் ஆர்வம் இல்லாததாலும், பெற்றோர் திட்டியதாலும் அவர்களிடம் கோபித்துக்கொண்டு யாரிடமும் சொல்லாமல் சென்றதாக தெரிவித்துள்ளார். இதையடுத்து அப்துல் வாசித்திற்கு அறிவுரைகளை கூறிய போலீசார், அவரது தந்தையிடம் அவனை ஒப்படைத்தனர்.

  Next Story
  ×