என் மலர்
உள்ளூர் செய்திகள்

காஞ்சிபுரம் அருகே கோழி ஏற்றிச்சென்ற லாரி மீது கார் மோதல்- 4 பேர் படுகாயம்
- விபத்தால் காஞ்சிபுரம்-திருவண்ணாமலை செல்லும் சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
காஞ்சிபுரம்:
திருச்சியை சேர்ந்தவர் விக்கேஷ். இவர் தனது உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் காரில் காளஸ்த்திரி சென்றுவிட்டு திரும்பி சென்று கொண்டு இருந்தார்.
காஞ்சிபுரம் வழியாக செவிலிமேடு பகுதியை கடந்து பாலாற்று மேம்பாலத்தில் சென்றி கொண்டிருந்த போது முன்னால் சென்று கொண்டிருந்த கோழி ஏற்றி சென்ற மினிலாரி மீது மோதியது. இதில் காரில் இருந்த விக்கேஷ், 2குழந்தைகள் மற்றும் டிரைவர் ஆகிய 4பேர் பலத்த காயம் அடைந்தனர். அவர்கள் காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
இந்த விபத்தால் காஞ்சிபுரம்-திருவண்ணாமலை செல்லும் சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
காஞ்சிபுரம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






