என் மலர்
உள்ளூர் செய்திகள்

திருத்தணி அருகே பையில் சுற்றி வீசப்பட்ட பச்சிளம் குழந்தை உடல்- போலீசார் விசாரணை
- குழந்தையின் உடலை மீட்டு பரிசோதனைக்காக திருத்தணி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
- குழந்தையை வீசி சென்ற தாய் யார்? என்று தெரியவில்லை.
திருத்தணி:
திருத்தணி அடுத்த கனக்கமாசத்திரம் அருகே முத்து கொண்டாபுரம் பகுதியில் உள்ள கொசத்தலை ஆற்றின் குறுக்கே மேம்பாலம் உள்ளது. இந்த பாலத்தின் கீழ் ஒரு பையில் சுற்றப்பட்ட நிலையில் பிறந்து ஒரு நாளே ஆன பச்சிளம் பெண்குழந்தை தொப்புள் கொடியுடன் இறந்த நிலையில் இருந்தது.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் கனகம்மா சத்திரம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து சென்று குழந்தையின் உடலை மீட்டு பரிசோதனைக்காக திருத்தணி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
குழந்தையை வீசி சென்ற தாய் யார்? என்று தெரியவில்லை. கள்ளக்காதில் பிறந்ததால் குழந்தையை கொன்று வீசினார்களா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Next Story






