என் மலர்
உள்ளூர் செய்திகள்

காஞ்சிபுரம் அருகே தண்டவாளத்தில் அமர்ந்து புகைபிடித்த சிறுவன் பலி
- 4 நண்பர்களுடன் சேர்ந்து ரித்தீஷ் ரெயில்வே தண்டவாளத்தில் அமர்ந்து புகை பிடிக்க சென்றார்.
- தண்டவாளம் அருகே உள்ள கருங்கல் ஜல்லியில் ரித்தீஷ் விழுந்ததில் பின் தலையில் கருங்கற்கள் குத்தி ரித்தீஷ் துடிதுடித்து இறந்து போனார்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் அடுத்த திருக்காளிமேடு பகுதியில் வசிப்பவர் காளிதாஸ். இவரது மகன் ரித்தீஷ் (வயது 14). 9-ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று இரவு 4 நண்பர்களுடன் சேர்ந்து ரித்தீஷ் ரெயில்வே தண்டவாளத்தில் அமர்ந்து புகை பிடிக்க சென்றார்.
தண்டவாளத்தை தாண்டும் போது கால் தவறி கீழே விழுந்தார். தண்டவாளம் அருகே உள்ள கருங்கல் ஜல்லியில் ரித்தீஷ் விழுந்ததில் பின் தலையில் கருங்கற்கள் குத்தி சம்பவ இடத்திலேயே ரித்தீஷ் துடிதுடித்து இறந்து போனார்.
Next Story






