என் மலர்
உள்ளூர் செய்திகள்

பிரியாணி கடைக்காரர் கொலை ஜார்ஜ் டவுண் கோர்ட்டில் 4 பேர் சரண்
- பிரியாணி கடை நடத்தி வந்த நாகூர்கனி என்பவர் நேற்று முன்தினம் இரவு வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
சென்னை:
அயனாவரம் மார்க்கெட் அருகே பிரியாணி கடை நடத்தி வந்த நாகூர்கனி என்பவர் நேற்று முன்தினம் இரவு வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் கொலை வழக்கு தொடர்பாக சென்னை ஜார்ஜ் டவுண் கோர்ட்டில் அரும்பாக்கத்தை சேர்ந்த ஜீவன், கோடம்பாக்கம் பகுதியை சேர்ந்த ஆசை, வடபழனி பகுதியை சேர்ந்த அகஸ்டின், நீலாங்கரை பகுதியை சேர்ந்த அஜித்குமார் ஆகிய 4 பேர் சரண் அடைந்துள்ளனர். அவர்களை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.
Next Story






