என் மலர்
உள்ளூர் செய்திகள்

மாடியில் நின்றபடி தென்னைமர ஓலையை இழுத்த பெண் தவறி விழுந்து பலி
- கால்தவறி அவர் மாடியிலேயே விழுந்தார். இதில் தலையில் பலத்த காயம் அடைந்த புவனேஸ்வரி பரிதாபமாக இறந்தார்.
- பெண் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருநின்றவூர்:
ஆவடி, காமராஜர் நகர், முத்துக்குமரன் தெருவை சேர்ந்தவர் ஆனந்தன். இவரது மனைவி புவனேஸ் வரி (வயது35). இவர்களது வீட்டின் அருகே உள்ள தென்னை மரத்தில் காய்ந்த ஓலை தொங்கியது. இதனை அகற்ற நினைத்த புவேனஸ்வரி வீட்டின் மாடியில் நின்றபடி தென்னை ஓலையை இழுத்தார்.
அப்போது கால்தவறி அவர் மாடியிலேயே விழுந்தார். இதில் தலையில் பலத்த காயம் அடைந்த புவனேஸ்வரி பரிதாபமாக இறந்தார்.
Next Story






