search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பெண்கள் தீக்குளிக்க முயற்சி
    X
    ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயற்சி செய்த பெண்கள்.

    ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பெண்கள் தீக்குளிக்க முயற்சி

    • நாங்கள் இதுவரை வட்டியாக ரூ.30 லட்சத்து 50 ஆயிரம் கொடுத்து உள்ளோம்.
    • எங்களிடம் சமாதானம் பேசி ரூ.25 லட்சம் பணத்தை கொடுத்தால் நிலத்தை ஒப்படைப்பதாக கூறினார்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் பவானியை அடுத்த ஒலகடம் பகுதியைச் சேர்ந்தவர் பழனிவேல். டெக்ஸ்டைல்ஸ் நடத்தி வருகிறார். இவரது மனைவி ஜோதிமணி. இவர் இன்று காலை தனது தாய் மற்றும் சகோதரி மகளுடன் ஈரோடு கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தார்.

    பின்னர் திடீரென அவர்கள் தாங்கள் கொண்டு வந்த மண்எண்ணை கேனை எடுத்து தீக்குளிக்க முயன்றனர். அப்போது அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீசார் அவர்களை ஓடிச்சென்று தடுத்து நிறுத்தினர். பின்னர் ஜோதிமணி ஒரு புகார் மனு கொடுத்தார்.

    எனக்கும் எனது மகன் சசிகுமாருக்கும் ஒலகடம் பகுதியில் 2.22 சென்ட் நிலம் உள்ளது. நாங்கள் அவசர தேவைக்காக ஜம்பை பகுதியைச் சேர்ந்த ஒருவரிடம் ரூ.25 லட்சம் கடன் பெற்றோம். இதற்காக 100 ரூபாய்க்கு மாதம் 2.50 வட்டியாக கொடுக்க வேண்டும் என்று ஒப்பந்தம் தயார் செய்து சார்பதிவாளர் அலுவலகத்தில் அவரது பெயருக்கு பத்திரம் எழுதிக் கொடுத்தோம். இதன் மதிப்பு ரூ.2 கோடியே 50 லட்சம் ஆகும்.

    இந்நிலையில் நாங்கள் இதுவரை வட்டியாக ரூ.30 லட்சத்து 50 ஆயிரம் கொடுத்து உள்ளோம். பின்னர் நாங்கள் முழுத்தொகையையும் கொடுத்து விடுகிறோம் என்று கூறினோம். ஆனால் அவர் பதில் சொல்லாமல் காலம் தாழ்த்தி வந்தார். இது தொடர்பாக நாங்கள் பவானி சார்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தோம். இதையடுத்து எங்களிடம் சமாதானம் பேசி ரூ.25 லட்சம் பணத்தை கொடுத்தால் நிலத்தை ஒப்படைப்பதாக கூறினார். அதன்படி நாங்கள் முதல் கட்டமாக ரூ.9 லட்சத்து 50 ஆயிரம் கொடுத்தோம். மீதி தொகையான ரூ.15 லட்சத்து 50 ஆயிரத்தை கொடுக்க முயன்ற போது அவர் பணத்தை வாங்க மறுத்து விட்டார். மேலும் எங்களது நிலத்தை வேறு ஒருவருக்கு பத்திரம் செய்து கொடுத்து விட்டார்.

    இது குறித்து கேட்டால் எங்களுக்கு கொலை மிரட்டல் விடுக்கிறார். மேலும் நிலத்தை வாங்கியவரும் நிலத்தை சுற்றி முள்வேலி போட்டு விட்டார். எனவே எங்கள் நிலத்தை மீட்டு ஒப்படைக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறி இருந்தார்.

    கலெக்டர் அலுவலகத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பெண்கள் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

    Next Story
    ×