search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருவேற்காடு நகராட்சியில் தூய்மை பணியாளர்களுக்கு பாராட்டு
    X

    திருவேற்காடு நகராட்சியில் தூய்மை பணியாளர்களுக்கு பாராட்டு

    • தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் பல்வேறு நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெ‌ற்றது.
    • நகர மன்ற தலைவர் என்.இ.கே. மூர்த்தி கலந்து கொண்டு சிறப்பாக பணி புரிந்தவர்களை பாராட்டி பரிசு வழங்கினார்.

    பூந்தமல்லி:

    கோவில் நகரமான திருவேற்காடு நகராட்சி பகுதிகளில் குப்பை இல்லாத, சுத்தமான நகரமாக மாற்றுவதற்கு நகராட்சி நிர்வாகம் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

    அதன் தொடர்ச்சியாக 18 வார்டுகளிலும் கடந்த இரண்டு வாரங்களாக ஸ்வச்சதா லீக் எனப்படும் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் பல்வேறு நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்றது.

    தூய்மையின் அவசியம், பிளாஸ்டிக் ஒழிப்பு போன்றவற்றை வலியுறுத்தி பேரணி, விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்குதல், தெரு முனை கூட்டங்கள், வாகனம் மூலம் பிரச்சாரம், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்தல், வீடு வீடாக பொது மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துதல், தூய்மை பணியாளர்களுக்கு மருத்துவ முகாம், கண் சிகிச்சை முகாம், குப்பைகளை தரம் பிரித்து அளிப்பது, இயற்கை உரம் தயாரிப்பு, பள்ளி - கல்லூரி மாணவர்களிடைய விழிப்புணர்வு ஏற்படுத்துதல், கலை நிகழ்ச்சிகள் நடத்துதல் போன்ற பல்வேறு வடிவங்களில் தூய்மை இந்தியா திட்டம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

    இதனை தொடர்ந்து காந்தி ஜெயந்தி அன்று திருவேற்காடு நகராட்சியில் சிறப்பாக பணிபுரிந்த தூய்மை பணியாளர்கள், மேற்பார்வையாளர்கள், பரப்புரையாளர்கள் ஆகியோருக்கு பாராட்டு விழா நடைபெற்றது.

    இதில் நகர மன்ற தலைவர் என்.இ.கே. மூர்த்தி கலந்து கொண்டு சிறப்பாக பணி புரிந்தவர்களை பாராட்டி பரிசு வழங்கினார். நிகழ்ச்சியில் நகர் மன்ற துணை தலைவர் ஆனந்தி ரமேஷ், நகராட்சி ஆணையர் ஜகாங்கீர் பாஷா, துப்புரவு அலுவலர் ஆல்பர்ட் அருள்ராஜ், துப்புரவு ஆய்வாளர் பிரகாஷ், கவுன்சிலர்கள் பிரதானம், காஞ்சனா இளையராஜா, ஜானகி சுடலைமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மேலும் தூய்மை இந்தியா திட்டத்தினை சிறப்பாக செயல்படுத்திய சிறந்த கல்லூரி, பள்ளிகள், மருத்துவமனை, பூங்கா, தனியார் நிறுவனங்களுக்கு கேடயம் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டது.

    Next Story
    ×