search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சித்தம்பாக்கம் ஊராட்சியில் அனுமதி இன்றி அம்பேத்கர் சிலை வைக்க முயன்றதால் பரபரப்பு
    X

    சித்தம்பாக்கம் ஊராட்சியில் அனுமதி இன்றி அம்பேத்கர் சிலை வைக்க முயன்றதால் பரபரப்பு

    • தலைவர்களின் சிலையை வைக்க வருவாய் துறை,காவல் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் அனுமதி பெற்று வைக்க வேண்டும் என்பது நடைமுறையில் உள்ளது.
    • இருப்பினும், அப்பகுதியில் பதட்டமும், பரபரப்பும் நிலவுகிறது. இதனால் அப்பகுதியில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    பெரியபாளையம்:

    திருவள்ளூர் மாவட்டம், வெங்கல் அருகே சித்தம்பாக்கம் ஊராட்சியில் உள்ள சர்ச் அருகே இளைஞர்கள் சிலர் ஒன்றரை அடி உயரம் கொண்ட மார்பளவு அம்பேத்கர் சிலையை சிமெண்ட் மூலம் செய்து அதற்கு தங்க முலாம் பூசி அதனை வைக்க முயன்றனர்.

    ஆனால், தலைவர்களின் சிலையை வைக்க வருவாய் துறை,காவல் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் அனுமதி பெற்று வைக்க வேண்டும் என்பது நடைமுறையில் உள்ளது. இந்நிலையில், அம்பேத்கரின் 132-வது பிறந்தநாளை கொண்டாடும் வகையில் இங்குள்ள காலனியைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் ஆர்வக்கோளாறு காரணமாக அம்பேத்கரின் சிலையை வைக்க முயன்றனர்.

    இது குறித்து தகவல் அறிந்த ஊத்துக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு கணேஷ் குமார் தலைமையில் வெங்கல் காவல் நிலைய போலீஸ் இன்ஸ்பெக்டர் தர்மலிங்கம் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு இன்று விடியற்காலை விரைந்து சென்றனர். அம்பேத்கர் சிலையை உரிய அனுமதியின்றி வைக்க கூடாது என்று தடுத்து நிறுத்தினர்.

    இது குறித்து திருவள்ளூர் தாசில்தார் மதியழகனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.அவரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தார். இளைஞர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். உரிய அனுமதி பெற்று அம்பேத்கார் சிலையை வைக்க அறிவுறுத்தினார். மேலும் அங்கு வைத்திருந்த அம்பேத்கர் சிலையை துணியை கொண்டு மூடி சீல் வைத்தார். இதன் பின்னர், அனைவரும் அமைதியாக கலைந்து சென்றனர்.இருப்பினும், அப்பகுதியில் பதட்டமும், பரபரப்பும் நிலவுகிறது. இதனால் அப்பகுதியில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    Next Story
    ×