என் மலர்
உள்ளூர் செய்திகள்

அம்பத்தூரில் தாலி கயிற்றால் கழுத்தை இறுக்கி இளம்பெண் கொலை
- போலீசார் அங்கு சென்று பார்த்தபோது பவித்ரா தாலி கயிற்றால் கழுத்தை இறுக்கிய நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
- அம்பத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜாைவ தேடி வருகின்றனர்.
அம்பத்தூர்:
அம்பத்தூர், கங்கை நகர், கள்ளிக்குப்பம் பகுதியில் வசித்து வந்தவர் பவித்ரா (28). இவர் கருத்து வேறுபாடு காரணமாக முதல் கணவரை பிரிந்து விட்டு கடந்த 6 மாதத்துக்கு முன்பு கள்ளிக்குப்பம், கங்கை நகரைச் சேர்ந்த ராஜா என்பவரை 2-வதாக திருமணம் செய்து கொண்டார்.
இந்த நிலையில் இன்று அதிகாலை 2 மணி அளவில் பவித்ரா வீட்டில் சண்டை நடப்பதாக அம்பத்தூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து இன்ஸ்பெக்டர் ராமசாமி, சப்-இன்ஸ்பெக்டர் முபாரக் தலைமையில் போலீசார் அங்கு சென்று பார்த்தபோது பவித்ரா தாலி கயிற்றால் கழுத்தை இறுக்கிய நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். அவரது கணவர் ராஜா மாயமாகி இருந்தார்.
பவித்ராவின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.
பவித்ராவின் கணவர் தப்பி ஓடி இருப்பதால் அவர் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டு உள்ளது.
இதுகுறித்து அம்பத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜாைவ தேடி வருகின்றனர்.






