என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சொத்து வரி, மின் கட்டண உயர்வை கண்டித்து பூந்தமல்லியில் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்
    X

    சொத்து வரி, மின் கட்டண உயர்வை கண்டித்து பூந்தமல்லியில் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்

    • திருவள்ளூர் மத்திய மாவட்ட அ.தி.மு.க.சார்பில் பூந்தமல்லி, குமணன்சாவடியில் இன்று காலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • சொத்து வரி, மின்கட்டணம் மற்றும் பால் விலை உயர்வை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன.

    பூந்தமல்லி:

    சொத்து வரி, மின் கட்டணம் மற்றும் பால் விலை உயர்வை கண்டித்தும், உயர்த்தப்பட்ட கட்டணங்களை உடனடியாக திரும்ப பெற வலியுறுத்தியும் தமிழகம் முழுவதும் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    திருவள்ளூர் மத்திய மாவட்ட அ.தி.மு.க.சார்பில் பூந்தமல்லி, குமணன்சாவடியில் இன்று காலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. முன்னாள் அமைச்சர் பென்ஜமின் தலைமை தாங்கினார். நகர செயலாளர் கே.எஸ்.ரவிச்சந்திரன் உள்ளிட்ட சுமார் 1000-க்கும் மேற்பட்ட அ.தி.மு.க.வினர் கலந்து கொண்டனர்.

    ஆர்ப்பாட்டத்தின் போது சொத்து வரி, மின்கட்டணம் மற்றும் பால் விலை உயர்வை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன. அப்போது முன்னாள் அமைச்சர் பென்ஜமின் பேசும்போது, அ.தி.மு.க. அரசின் திட்டங்களை தி.மு.க.வினர் முடக்கி விட்டார்கள். முதியோர் உதவி தொகை, திருமண உதவி தொகையை நிறுத்தி விட்டனர்.தி.மு.க.வினர் புதிதாக எந்த திட்டத்தையும் கொண்டு வரவில்லை.

    பூந்தமல்லி நகரத்தில் அ.தி.மு.க. ஆட்சியில் மழை நீர் கால்வாய் திட்டத்தை கொண்டு வந்து கால்வாய் அமைத்ததால் தான் தற்போது தண்ணீர் தேங்க வில்லை என்றார்.

    Next Story
    ×