search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மின்கட்டணம், பால், சொத்துவரி உயர்வை கண்டித்து காஞ்சிபுரத்தில் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்
    X

    மின்கட்டணம், பால், சொத்துவரி உயர்வை கண்டித்து காஞ்சிபுரத்தில் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்

    • கூடுவாஞ்சேரி நகர அ.தி.மு.க. சார்பில் நகர செயலாளர் சீனிவாசன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • திருத்தணியில் நகர செயலாளர் சவுந்தரராஜன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

    காஞ்சிபுரம்:

    மின்கட்டணம், சொத்துவரி, பால்விலை உயர்வை கண்டித்து காஞ்சிபுரம் மாவட்ட அ.தி.மு.க.சார்பில் காஞ்சிபுரம் காந்தி ரோடு பெரியார் தூண் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான சோமசுந்தரம் தலைமை தாங்கினார்.

    இதில் அமைப்பு செயலாளர் வாலாஜாபாத் பா.கணேசன், மைதிலி திருநாவுக்கரசு, நிர்வாகிகள் மாவட்ட அம்மா பேரவை செயலாளர் கே.யு.எஸ் சோமசுந்தரம், மாவட்ட பொருளாளர் வள்ளிநாயகம், பெரிய காஞ்சிபுரம் கூட்டுறவு வங்கி தலைவர் பாலாஜி, பகுதி செயலாளர் எம்.பி.ஸ்டாலின்,ஒன்றிய செயலாளர் ஜீவானந்தம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    கூடுவாஞ்சேரி நகர அ.தி.மு.க. சார்பில் நகர செயலாளர் சீனிவாசன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக முன்னாள் எம்.எல்.ஏ.வும் மாநில மகளிர் அணி இணைச் செயலாளருமான கனிதாசம்பத், ஒன்றிய செயலாளர் எம்.சி. சம்பத், நகர மன்ற உறுப்பினர்கள் எஸ்.டி. பிரசாத், தங்கராஜ், வெங்கடேசன், நாகேந்திரன், கிரிதரன், மாவட்டத் துணைச் செயலாளர்கள் அருள் நகர் பாலாஜி, நகர மகளிர் அணி செயலாளர் அம்சவல்லி, நகர அம்மா பேரவை செயலாளர் ஏகாம்பரம், நகர சிறுபான்மை பிரிவு செயலாளர் பாபு, இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளர் தினேஷ்குமார், வழக்கறிஞர் பிரிவு உமாபதி உட்படபலர் கலந்து கொண்டனர்.

    திருத்தணியில் நகர செயலாளர் சவுந்தரராஜன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. முன்னாள் அமைச்சரும் திருவள்ளூர் மேற்கு மாவட்ட செயலாளருமான பி. வி.ரமணா, முன்னாள் அரக்கோணம் நாடாளுமன்ற உறுப்பினரும்,அமைப்பு செயலாளருமான திருத்தணி கோ. அரி ஆகியோர் கண்டன உரை ஆற்றினர். இதில் ஏராளமான அ.தி.மு.க.நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×