என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பூந்தமல்லி அருகே மெட்ரோ ரெயில் குடோனில் தீ விபத்து
    X

    பூந்தமல்லி அருகே மெட்ரோ ரெயில் குடோனில் தீ விபத்து

    • ஏராளமான வடமாநில தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகிறார்கள்.
    • இன்று காலை திடீரென இந்த குடோனில் தீ விபத்து ஏற்பட்டது.

    பூந்தமல்லி:

    பூந்தமல்லி அடுத்த காட்டுப்பாக்கம் பகுதியில் மெட்ரோ ரெயில் பணிகளுக்காக சாலையின் இரு புறங்களிலும் இரும்பு தடுப்புகள் அமைப்பதற்கான செட்டுகள் அமைக்கும் பணி நடந்து வருகிறது.

    இதற்காக அப்பகுதியில் குடோன் அமைக்கப்பட்டு உள்ளது. இங்கு ஏராளமான வடமாநில தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகிறார்கள். இன்று காலை திடீரென இந்த குடோனில் தீ விபத்து ஏற்பட்டது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த அங்கிருந்த வடமாநில தொழிலாளர்கள் அலறியடித்துக் வெளியே ஓடி வந்தனர். தகவல் அறிந்ததும் மதுரவாயல், பூந்தமல்லி பகுதிகளில் இருந்து தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். எனினும் அங்கிருந்த ஏராளமான பொருட்கள் எரிந்து நாசமானது.

    Next Story
    ×