என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஊத்துக்கோட்டை சோதனை சாவடியில் லஞ்ச ஒழிப்பு சோதனை- கணக்கில் வராத ரூ.53 ஆயிரம் பறிமுதல்
- ஊழியர்கள் சிலர் வாகன ஓட்டிகளிடம் லஞ்சம் பெறுவதாக புகார் உள்ளது.
- மோட்டார் வாகன ஆய்வாளர் ராஜன் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஜுடி அபிகெயில் தெரிவித்தார்.
ஊத்துக்கோட்டை:
திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை நகர எல்லையில் அமைந்துள்ள அண்ணாநகர் பகுதியில் வட்டாரப் போக்குவரத்து துறை சோதனைச்சாவடி உள்ளது.
இதிலுள்ள ஊழியர்கள் சிலர் வாகன ஓட்டிகளிடம் லஞ்சம் பெறுவதாக புகார் உள்ளது.
இந்த நிலையில் சென்னை லஞ்ச ஒழிப்புத் துறை ஆய்வாளர் ஜூடி அபிகெயில் தலைமையில் 6 பேர் கொண்ட அதிகாரிகள் குழு நேற்று மாலை சோதனைச் சாவடியில் திடீர் சோதனை நடத்தினர்.
அப்போது மோட்டார் வாகன ஆய்வாளர் ராஜன் பணியில் இருந்தார். இரவு 11 மணி வரை சோதனை நீடித்தது. இந்த சோதனையில் கணக்கில் வராத ரூ. 53,400 பணம் சிக்கியது.
இதுகுறித்து மோட்டார் வாகன ஆய்வாளர் ராஜன் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஜுடி அபிகெயில் தெரிவித்தார்.
Next Story






