search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாவுமில்லில் தண்ணீர் டேங்கரில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரேசன் அரிசி மூடைகள் பறிமுதல்
    X

    மாவுமில்லில் தண்ணீர் டேங்கரில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரேசன் அரிசி மூடைகள் பறிமுதல்

    • தனியாக டிராக்டர் இல்லாமல் நிறுத்தப்பட்டிருந்த தண்ணீர் டேங்கரில் அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
    • நூதன முறையில் தண்ணீருக்கு பதிலாக டேங்கர் முழுவதும் ரேசன் அரிசி மூடைகளை பதுக்கி வைத்திருப்பதை அதிகாரிகள் கண்டு பிடித்தனர்.

    உசிலம்பட்டி:

    உசிலம்பட்டி-வத்தலக்குண்டு ரோட்டில் தனியார் மாவுமில் உள்ளது. இங்கு ரேசன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக கிடைத்த தகவலின்பேரில் உசிலம்பட்டி கோட்டாட்சியர் உத்தரவின்படி, வட்டாட்சியர் அறிவுறுத்தலின் கீழ் வட்ட வழங்கல் அலுவலர் பாலகுமாரன், போலீஸ் டி.எஸ்.பி. நல்லு மற்றும் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.

    அப்போது இந்த ரைஸ்மில்லுக்குள் மாவாக அரைக்க 15-க்கும் மேற்பட்ட மூடைகளில் ரேசன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் அருகில் தனியாக டிராக்டர் இல்லாமல் நிறுத்தப்பட்டிருந்த தண்ணீர் டேங்கரில் சோதனை நடத்தினர். அதில் நூதன முறையில் தண்ணீருக்கு பதிலாக டேங்கர் முழுவதும் ரேசன் அரிசி மூடைகளை பதுக்கி வைத்திருப்பதை கண்டு பிடித்தனர்.

    சோதனை நடத்த அதிகாரிகள் வந்ததைத் தொடர்ந்து ரைஸ்மில் உரிமையாளர் கலா (வயது 60), அவரது மகன் பிரசாத் (25) ஆகியோர் தலைமறைவாகி விட்டனர். இதையடுத்து 5 டன் ரேசன் அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

    ரேசன் அரிசி பதுக்கல் குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×