என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தொடர்ந்து மழை: காஞ்சிபுரம்-செங்கல்பட்டு மாவட்டத்தில் 47 ஏரிகள் முழுவதும் நிரம்பியது
    X

    தொடர்ந்து மழை: காஞ்சிபுரம்-செங்கல்பட்டு மாவட்டத்தில் 47 ஏரிகள் முழுவதும் நிரம்பியது

    • செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த உயரம் 24 அடி. இதில் 22.05 அடிக்கு தண்ணீர் உள்ளது.
    • புழல் ஏரியின் மொத்த உயரம் 21 அடி. இதில் 18.58 அடிக்கு தண்ணீர் உள்ளது.

    காஞ்சிபுரம்:

    தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து உள்ளது. இதன் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் விட்டு, விட்டு கனமழை பெய்து வருகிறது. இதனால் குடிநீர் ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளன.

    ஏரிகள் மாவட்டம் என்று அழைக்கப்படும் காஞ்சிபுரம்-செங்கல்பட்டு ஒருங்கிணைந்த மாவட்டத்தில் பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள மொத்தம் 909 ஏரிகள் உள்ளது. இதில் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக 47 ஏரிகள் 100 சதவீதம் நிரம்பி இருக்கிறது. 101 ஏரிகள் 75 சதவீதமும், 153 ஏரிகள் 50 சதவீதமும், 409 ஏரிகள் 25 சதவீதமும் நிரம்பி இருப்பதாக பொதுப்பணித்துறையினர் தெரிவித்து உள்ளனர். வரும் நாட்களில் தொடர்ந்து பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளதால் ஏற்கனவே நிரம்பி உள்ள ஏரிகளை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

    செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த உயரம் 24 அடி. இதில் 22.05 அடிக்கு தண்ணீர் உள்ளது. மொத்த கொள்ளளவான 3,645 மில்லியன் கனஅடியில் 3,132 மி.கனஅடி தண்ணீர் உள்ளது. இன்று காலை நிலவரப்படி ஏரிக்கு 188 கனஅடி தண்ணீர் வருகிறது. 188 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

    புழல் ஏரியின் மொத்த உயரம் 21 அடி. இதில் 18.58 அடிக்கு தண்ணீர் உள்ளது. மொத்த கொள்ளளவான 3,300 மி.கனஅடியில் 2,726 மி.கனஅடி தண்ணீர் நிரம்பி உள்ளது. ஏரிக்க 189 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. 189 கனஅடிநீர் அப்படியே வெளியேற்றப்படுகிறது.

    Next Story
    ×