என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஊத்துக்கோட்ைட வாலிபர் கொலையில் கைதான 3 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
    X

    ஊத்துக்கோட்ைட வாலிபர் கொலையில் கைதான 3 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

    • ஊத்துக்கோட்டை அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் ராபின்.
    • மோட்டார் சைக்கிள்களில் வந்த 4 பேர் கொண்ட கும்பல் ராபினை சரமாரியாக வெட்டி கொலை செய்துவிட்டு தப்பி ஓடிவிட்டனர்.

    ஊத்துக்கோட்டை:

    ஊத்துக்கோட்டை, அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் ராபின் (வயது24). இவர் கடந்த ஆகஸ்ட் 31-ந்தேதி இரவு போந்தவாக்கத்தில் நடந்ந நண்பரின் திருமண நிகழ்ச்சியில் கலந்துவிட்டு மோட்டார் சைக்கிளில் திரும்பி வந்தார்.

    ஊத்துக்கோட்டை பழைய பெட்ரோல் பங்க் அருகே வந்துகொண்டிருந்த போது 2 மோட்டார் சைக்கிள்களில் வந்த 4 பேர் கொண்ட கும்பல் ராபினை சரமாரியாக வெட்டி கொலை செய்துவிட்டு தப்பி ஓடிவிட்டனர்.

    இதுதொடர்பாக சோழவரத்தை சேர்ந்த கார்த்திக் (23), காரனோடை யை சேர்ந்த சரவணன்(26), பாடியநல்லூர் ஜோதி நகரை சேர்ந்த ராகுல்( 26) ஆகியோரை போலீசார் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.

    வேளாங்கண்ணி அருகே உள்ள மரக்காணத்தில் நடந்த கொலைக்கு பழிக்குப் பழி தீர்க்க ராபின் கொலை நடந்தது என்று விசாரனையில் தெரியவந்தது.

    கைது செய்யப்பட்ட கார்த்திக், சரவணன், ராகுல் ஆகியோர் மீது பல போலீஸ் நிலையங்களில் கொலை, கொள்ளை வழக்குகள் உள்ளன.

    தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபட்ட அவர்கள் 3 பேரையும் குண்டர் சட்டத்தில் கைதுசெய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிபாஸ் கல்யாண், மாவட்ட கலெக்டர் ஆல்பிஜான் வர்க்கீசுக்கு பரிந்துரை செய்தார்.

    இதைத்தொடர்ந்து கலெக்டரின் உத்தரவின் படி கார்த்திக், சரவணன், ராகுல் ஆகிய 3 பேரும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.

    Next Story
    ×