search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வானூர் அருகே நடந்த இரட்டை கொலை வழக்கில் 3 பேர் கைது
    X

    வானூர் அருகே நடந்த இரட்டை கொலை வழக்கில் 3 பேர் கைது

    • தப்பியோடி தலைமறைவாக உள்ள வழுதாவூர் முகிலனை தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்.
    • வழக்கில் வேறு யாருக்கேனும் தொடர்புள்ளதா என்பது குறித்தும் தனிப்படை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    வானூர்:

    புதுவை மாநிலம் வில்லியனூர் அருகே பிள்ளையார்குப்பத்தை சேர்ந்தவர் அருண்குமார் (வயது 28), கோர்க்காட்டை சேர்ந்தவர் அன்பரசன் (32) ஆகியோர் மயிலம் போலீஸ் நிலையத்திற்கு கையெழுத்திட சென்றனர். இவர்களை வானூர் அருகே செங்கமேடு-திருவக்கரை சாலையில் மர்மகும்பல் சுற்றி வளைத்தது. இக்கும்பல் கத்தி உள்ளிட்ட ஆயுதங்களை கொண்டு அருண்குமார், அன்பரசனை கொலை செய்து அங்கிருந்து தப்பிவிட்டனர்.

    இது தொடர்பான வழக்கு வானூர் போலீசார் வழக்கு பதிவு செய்தனர் வானூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அரிகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். விழுப்புரம் போலீஸ் சூப்பிரண்டு சசாங்சாய் உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் அரி கிருஷ்ணன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

    இதில் வழுதாவூரைச் சேர்ந்த முகிலனின் கூட்டாளிகளான பிரபு, சந்துரு சில மாதங்களுக்கு முன்பாக கொலை செய்யப்பட்டனர். இதில் அருண்குமார், அன்பரசன் ஆகியோருக்கு தொடர்பிருந்தது. இதனால் பழிக்குப்பழி வாங்க இவர்களை முகிலன் கொலை செய்திருக்கலாம் என்ற கோணத்தில் தனிப்படை போலீசார் விசாரணையை தொடங்கினர்.

    இதில் தனிப்படை போலீசார் முகிலனை தேடி சென்ற போது அவர் தப்பியோடியது தெரியவந்தது. தொடர்ந்து புதுவை மாநிலம் வில்லியனூர் பகுதி, விழுப்புரம் மாவட்டம் வழுதாவூர், வானூர் பகுதிகளில் உள்ள முகிலனின் கூட்டாளிகள் 10-க்கும் மேற்பட்டோரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

    விசாரணையில், வானூரில் நடந்த இரட்டை கொலையில், புதுவை மாநிலம் வில்லியனூர் பகுதி கொடாத்தூரை சேர்ந்த ஸ்ரீகாந்த் (வயது 20), விழுப்புரம் மாவட்டம் வானூரை அடுத்த மாத்தூரை சேர்ந்த வீரசெழியன் (26), வழுதாவூரைச் சேர்ந்த ஜெகன் (23) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மேலும், தப்பியோடி தலைமறைவாக உள்ள வழுதாவூர் முகிலனை தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர். இந்த வழக்கில் வேறு யாருக்கேனும் தொடர்புள்ளதா என்பது குறித்தும் தனிப்படை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    Next Story
    ×