என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஊத்துக்கோட்டை அருகே லாரியின் கண்ணாடியை உடைத்து பணம்-செல்போன் திருடிய 3 பேர் கைது
- மும்பையை சேர்ந்தவர் ராகுல் லாரி டிரைவர்.
- லாரியின் கண்ணாடியை உடைத்து ராகுலின் பேண்ட் பாக்கெட்டில் இருந்த ரூ. 5 ஆயிரம்ரொக்கம், 2 செல்போன்கள் திருடி சென்று விட்டனர்.
ஊத்துக்கோட்டை:
மும்பையை சேர்ந்தவர் ராகுல்.லாரி டிரைவர். இவர் ஸ்ரீபெரும்புதூரில் இருந்து கும்மிடிப்பூண்டி அருகே உள்ள தேர்வாய்கண்டிகையில் உள்ள சிப்காட் தொழிற் பூங்காவுக்கு லாரியில் சென்றார். ஊத்துக்கோட்டை அருகே உள்ள பாலவாக்கம் செங்காளம்மன் கோயில் அருகே லாரியை சாலை ஓரமாக நிறுத்திவிட்டு அவர் தூங்கினார். அப்போது மர்ம நபர்கள் லாரியின் கண்ணாடியை உடைத்து ராகுலின் பேண்ட் பாக்கெட்டில் இருந்த ரூ. 5 ஆயிரம்ரொக்கம், 2 செல்போன்கள் திருடி சென்று விட்டனர்.
இது குறித்து ஊத்துக்கோட்டை துணை போலீஸ் கண்காணிப்பாளர் சாரதி உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் ஏழுமலை, ஏட்டுகள் ராவ்பகதூர் செல்வராஜ், லோகநாதன் ஆகியோர் விசாரணை நடத்தினர். இது தொடர்பாக ஊத்துக்கோட்டை அருகே உள்ள பெரம்பூர் கிராமத்தை சேர்ந்த பாலாஜி, நரேஷ், விஜயன்ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
Next Story






