என் மலர்
உள்ளூர் செய்திகள்

திருவண்ணாமலை அரசு பள்ளியில் தேனீக்கள் கொட்டி 20 மாணவ, மாணவிகள் காயம்
- இன்று காலை பள்ளிக்கு வந்த மாணவ, மாணவிகள் தேனீக்கள் கொட்டியது.
- இதில் 20 மாணவ, மாணவிகள் காயமடைந்தனர். 5 ஆசிரியர்களும் தேனீக்கள் கொட்டியதில் காயடைந்துள்ளனர்.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை அடுத்த மங்கலத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு ஏராளமான மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இன்று காலை வழக்கம் போல் பள்ளிக்கு மாணவ, மாணவிகள் வந்தனர்.
அங்குள்ள புதிய கட்டிடத்தில் தேனீக்கள் கூடு கட்டியுள்ளது. இன்று காலை பள்ளிக்கு வந்த மாணவ, மாணவிகள் தேனீக்கள் கொட்டியது.
இதில் மாணவர்கள் அலறி அடித்து ஓடினர். தேனீக்கள் விரட்டி சென்று அவர்களை கொட்டியது. இதில் 20 மாணவ, மாணவிகள் காயமடைந்தனர். 5 ஆசிரியர்களும் தேனீக்கள் கொட்டியதில் காயடைந்துள்ளனர். அவர்கள் அனைவரும் திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்..
Next Story






