search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஒகேனக்கல் வனப்பகுதியில் அடுத்தடுத்து 2 காட்டு யானைகள் பலி
    X

    ஒகேனக்கல் வனப்பகுதியில் அடுத்தடுத்து 2 காட்டு யானைகள் பலி

    • வனப்பகுதியில் இருந்து அடிக்கடி உணவுகளை தேடி யானைகள் வெளியே வந்து விளைநிலங்களை சேதப்படுத்தி வருகிறது.
    • 2 யானைகள் மர்மமான முறையில் இறந்து கிடந்தது தெரியவந்தது.

    பென்னாகரம்:

    தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல் வனப்பகுதியில் காட்டுயானைகள், மான்கள், காட்டுபன்றிகள் என அதிக அளவில் வனவிலங்குகள் உள்ளது.

    இந்த வனப்பகுதியில் இருந்து அடிக்கடி உணவுகளை தேடி யானைகள் வெளியே வந்து விளைநிலங்களை சேதப்படுத்தி வருகிறது.

    இந்த நிலையில் கடந்த மாதம் உணவு தேடி ஊருக்குள் வந்த 3 காட்டுயானைகள் மாரண்டஅள்ளி அருகே மின்வேலியில் சிக்கிய பலியாகியது. இதே போல் கம்பைநல்லூர் அருகே உயர்மின்கம்பி உரசியதில் ஒரு காட்டுயானை உயிரிழந்தது.தருமபுரி மாவட்டத்தில் தொடர்ந்து யானைகள் உயிரிழப்பு சம்பவம் நடந்து வருகிறது.

    இந்த நிலையில் ஒகேனக்கல் வனப்பகுதியில் போடூர் என்ற இடத்தில் ஒரு யானை இறந்து கிடந்தது. இதனை இன்று காலை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

    இது குறித்து உடனடியாக வனத்துறையினருக்கும், போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அங்கு 10 வயது மதிக்கதக்க ஆண் யானை ஒன்று உயிரிழந்தது தெரியவந்தது.

    இதே போல் கோடுப்பட்டி பகுதியில் ஒரு பெண் யானையும் இறந்து கிடந்தது. இதனையும் வனத்துறை மற்றும் போலீசார் விரைந்து சென்று பார்வையிட்டனர்.

    இந்த 2 யானைகள் மர்மமான முறையில் இறந்து கிடந்தது தெரியவந்தது. இது தொடர்பாக வனத்துறை, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×