என் மலர்
உள்ளூர் செய்திகள்

அனல் மின் நிலையத்தில் திருடிய 2 பேர் கைது
- எண்ணூர் அனல் மின் நிலையத்தின் புதிய கட்டுமான பணி நடந்து வருகிறது.
- மினி வேன் மற்றும் இரும்பு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
எண்ணூர் அனல் மின் நிலையத்தின் புதிய கட்டுமான பணி நடந்து வருகிறது. இங்கு எண்ணூர் காட்டுக்குப்பத்தைச் சேர்ந்த ரஞ்சித், எர்ணாவூர் குப்பத்தைச் சேர்ந்த சத்யா காவலாளிகளாக வேலை பார்த்து வந்தனர். இவர்கள் கட்டுமானத்திற்காக வைக்கப்பட்டிருந்த இரும்பு பொருட்களை திருடி மினி வேனில் ஏற்றி எடுத்துச் செல்ல முயன்றனர். அவர்களை எண்ணூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுதாகர் மற்றும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து மினி வேன் மற்றும் இரும்பு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
Next Story






