என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    1000 நீர்நிலைகள் அடையாளம் காணப்பட்டது- ஒட்டியம்பாக்கம், செம்பாக்கம் ஏரிகளில் நீர் இருப்பை அதிகரிக்க சீரமைப்பு பணி
    X

    1000 நீர்நிலைகள் அடையாளம் காணப்பட்டது- ஒட்டியம்பாக்கம், செம்பாக்கம் ஏரிகளில் நீர் இருப்பை அதிகரிக்க சீரமைப்பு பணி

    • மேல்மருவத்தூர் அருகே உள்ள பொலம்பாக்கம் ஏரி உள்ளிட்ட பகுதிகளில் சீரமைப்பு பணிகள் நடைபெற உள்ளது.
    • கீழ்கத்தளை ஏரியில் சட்டவிரோதமாக தண்ணீர் எடுக்கும் இடங்கள் கண்டறியப்பட்டுள்ளன.

    செங்கல்பட்டு:

    சென்னை புறநகரில் பயன்பாட்டில் இல்லாத கல்குவாரி தண்ணீர் மற்றும் ஏரி, குளங்களின் தண்ணீரை சுத்திகரித்து குடிநீருக்கு கொண்டு வர திட்டங்கள் தீட்டப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஏரிகள் நிறைந்த செங்கல்பட்டு மாவட்டத்தில் குடிநீர் ஆதாரத்தை அதிகரிக்க மாவட்ட நிர்வாகம் தன்னார்வ அமைப்பினருடன் இணைந்து திட்டமிட்டு உள்ளது.

    இதையொட்டி மாவட்டத்தில் உள்ள சுமார் 1000 நீர்நிலைகளை முதல் கட்டமாக அடையாளம் காணப்பட்டு உள்ளது. இதில் பெரும்பாலன ஏரி, குளங்கள் ஆக்கிரமிப்பு மற்றும் தூர்வாராமல் அப்படியே உள்ளன. இதையடுத்து அந்த நீர்நிலைகள் அனைத்தையும் படிப்படியாக சீரமைப்பு செய்து குடிநீர் மற்றும் பிற தேவைகளுக்கு பயன்பாட்டிற்கு கொண்டு வர பணிகள் தொடங்கப்பட்டுஉள்ளன. இதில் கீழ்கட்டளை, ஒட்டியம்பாக்கம், திருப்போரூர் அருகே உள்ள செம்பாக்கம் ஏரி, வளையபு தூர்ஏரி, மேல்மருவத்தூர் அருகே உள்ள பொலம்பாக்கம் ஏரி உள்ளிட்ட பகுதிகளில் சீரமைப்பு பணிகள் நடைபெற உள்ளது.

    இதுகுறித்து அதிகாரிகள் கூறும்போது, கிராமப்புறங்களில் உள்ள சிறிய குளங்களை தூர்வாருவதும், புறநகர் பகுதிகளில் நீர்நிலை ஆக்கிரமிப்பு பெரும் சவாலாக உள்ளது. சில பெரிய ஏரிகளில் மதகுகள் பிரச்சினை உள்ளது. இதனை சீரமைக்க தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நீர்நிலைகளை மீட்டெடுப்பதே தற்போதைய இலக்கு. திருநீர்மலை போன்ற சில ஏரிகளை குடிநீர் ஆதாரமாக மாற்றுவதற்கு வாய்ப்பு உள்ளது. கீழ்கத்தளை ஏரியில் சட்டவிரோதமாக தண்ணீர் எடுக்கும் இடங்கள் கண்டறியப்பட்டுள்ளன.

    ஏரி, குளங்களுக்க எல்லை நிர்ணயம், பாதைகளை உருவாக்குதல், குப்பை கொட்டுவதைத் தடுக்க சுற்றுச்சுவர் கட்டுதல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. மேடவாக்கம் சந்திப்பு அருகே நீர்நிலையை சுத்தம் செய்து, சுற்றுச்சூழல் பூங்காவை உருவாக்கவும் திட்டமிட்டுள்ளோம் என்றார்.

    Next Story
    ×