என் மலர்
உள்ளூர் செய்திகள்

பெரியபாளையம் அருகே 100 வீடுகளை மழை நீர் சூழ்ந்தது- பொதுமக்கள் அவதி
- வடகிழக்கு பருவ மழை தீவிரம் அடைந்து கனமழை கொட்டி வருகிறது.
- பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
பெரியபாளையம:
வடகிழக்கு பருவ மழை தீவிரம் அடைந்து கனமழை கொட்டி வருகிறது. பெரியபாளையம் மற்றும் சுற்றுப் புற பகுதிகளிலும் மழை வெளுத்து வாங்கியது.
இதனால் தாழ்வான இடங்களில் மழை நீர் வெளியேற வழி இல்லாததால் தேங்கி நிற்கிறது. பொது மக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.மேலும், மழை நீருடன்,கழிவு நீரும் கலப்பதால் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இந்தநிலையில் பெரியபாளையம் அருகே உள்ள காக்கவாக்கம் ஊராட்சியில் கண்ணன் நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை நீர் 100 வீடுகளை சூழ்ந்து நிற்கிறது. இதனால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்து நிற்கும் மழை நீரை வெளியேற்ற ஊராட்சி நிர்வாகமும், வருவாய் துறை அதிகாரிகளும் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கிராமமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
Next Story






