என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  செங்கல்பட்டில் அறநிலையத்துறை பணிக்கு தேர்வு எழுத 10 பேருக்கு அனுமதி மறுப்பு
  X

  செங்கல்பட்டில் அறநிலையத்துறை பணிக்கு தேர்வு எழுத 10 பேருக்கு அனுமதி மறுப்பு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • தேர்வு எழுத வந்தவர்கள் காலை 9 மணி வரை தேர்வு மையத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர்.
  • பல்வேறு ஊர்களில் இருந்து வந்தவர்கள் தேர்வு எழுத முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

  செங்கல்பட்டு:

  தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் அலுவலகத்தில் பல்வேறு பணிகளுக்கான தேர்வு இன்று நடந்தது.

  ஒவ்வொரு தேர்வு மையத்திலும் இன்று காலை 9.30 மணிக்கு தேர்வு தொடங்கியது. தேர்வு எழுதுபவர்கள் காலை 9 மணிக்குள் தேர்வு மையத்துக்குள் வர வேண்டும் என்றும் கூறப்பட்டிருந்தது.

  செங்கல்பட்டில் உள்ள புனித கொலம்பா மேல்நிலைப் பள்ளியில் தேர்வு மையம் அமைக்கப்பட்டு இருந்தது. இங்கு இன்று தேர்வு எழுதுவதற்காக ஏராளமானோர் வந்தனர். தேர்வு எழுத வந்தவர்கள் காலை 9 மணி வரை தேர்வு மையத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர். அதன் பிறகு தேர்வு மையத்தின் வெளிப்புற கேட் பூட்டப்பட்டது.

  இதற்கிடையே காலை 9 மணிக்கு மேல் 10 பேர் தேர்வு எழுத வந்தனர். ஆனால் கேட் பூட்டப்பட்டதால் அவர்கள் உள்ளே அனுமதிக்கப்பட வில்லை. தேர்வு எழுதவும் அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதையடுத்து தேர்வு எழுத வந்தவர்கள் தேர்வு எழுத முடியாமல் பள்ளி வாசலில் காத்து கிடந்தனர். பின்னர் பல்வேறு ஊர்களில் இருந்து வந்தவர்கள் தேர்வு எழுத முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

  Next Story
  ×