search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாமக்கல் மண்டலத்தில் பண்ணைகளில் 10 கோடி முட்டை தேக்கம்
    X

    நாமக்கல் மண்டலத்தில் பண்ணைகளில் 10 கோடி முட்டை தேக்கம்

    • கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 1-ந்தேதி 545 காசாக நிர்ணயம் செய்யப்பட்ட கொள்முதல் விலையில் ஏற்றம், இறக்கம் காணப்பட்டு 24-ந் தேதி 550 காசாக நிர்ணயம் செய்யப்பட்டது.
    • கடந்த 9-ந் தேதி 565 காசாக உயர்ந்து முட்டை கொள்முதல் வரலாற்றில் புதிய உச்சத்தை தொட்டது. இந்த புதிய விலை 20 நாட்கள் நீடித்தது.

    நாமக்கல்:

    தமிழகத்தில் சேலம், நாமக்கல் மாவட்டங்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பண்ணைகள் மூலம் 5 கோடி முட்டை கோழிகள் வளர்க்கப்படுகின்றன. இந்த கோழிகள் மூலம் தினமும் 4.5 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த முட்டைகள் நாடு முழுவதும் மட்டுமின்றி, வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

    தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு நிர்ணயிக்கும் விலைக்கு பண்ணையாளர்களிடமிருந்து வியாபாரிகள் முட்டை கொள்முதல் செய்ய வேண்டும். இந்த முட்டை கொள்முதல் விலையானது, தற்போது திருவிழா பண்டிகை காலங்களில் தேவை ஆகியவற்றை கருத்தில் கொண்டு நிர்ணயம் செய்யப்படுகிறது.

    கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 1-ந்தேதி 545 காசாக நிர்ணயம் செய்யப்பட்ட கொள்முதல் விலையில் ஏற்றம், இறக்கம் காணப்பட்டு 24-ந் தேதி 550 காசாக நிர்ணயம் செய்யப்பட்டது. கடந்த 9-ந் தேதி 565 காசாக உயர்ந்து முட்டை கொள்முதல் வரலாற்றில் புதிய உச்சத்தை தொட்டது. இந்த புதிய விலை 20 நாட்கள் நீடித்தது.

    இந்த நிலையில் நேற்று நாமக்கலில் முட்டை உற்பத்தியாளர்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் முட்டையின் தேவை மற்றும் உற்பத்தி குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. பின்னர் முட்டை விலையில் 20 காசுகள் குறைக்க முடிவு செய்யப்பட்டது.

    அதன்படி 565 காசாக இருந்த முட்டை விலை 545 காசாக நிர்ணயம் செய்யப்பட்டது. ஒரே நாளில் 20 காசுகள் குறைந்துள்ளது, பண்ணையாளர்களை கவலையடைய செய்துள்ளது. அதே நேரத்தில் முட்டை நுகர்வோர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    இது குறித்து தமிழ்நாடு முட்டை கோழி பண்ணையாளர்கள் சம்மேளன துணை தலைவர் வாங்கிலி சுப்பிரமணியம் கூறியதாவது:-

    வட மாநிலங்களில் அதிக குளிர் உள்ளதாலும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி அதிகரித்தாலும் முட்டை கொள்முதல் புதிய உச்சத்தை தொட்டது.

    இரண்டு வாரம் நீடித்து வந்த நிலையில் தற்போது 20 காசு குறைக்கப்பட்டுள்ளது. அதற்கு காரணம் நெக் விலைவில் இருந்து 65 காசுகள் குறைத்து 500 காசுக்கு மட்டுமே முட்டை கொள்முதல் செய்கின்றனர்.

    மேலும் வட மாநிலங்களுக்கு கடந்த 4 நாட்களாக முட்டை அனுப்புவது நிறுத்தப்பட்டுள்ளது. அதன் மூலம் ஒரு கோடி முட்டையும், பண்ணைகளில் 2 நாட்கள் இருப்பு 9 கோடியும் என, மொத்தம் 10 கோடி முட்டைகள் தேக்கம் அடைந்துள்ளது. அவற்றை கருத்தில் கொண்டு கொள்முதல் விலை குறைக்கப்பட்டு உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×