என் மலர்
உள்ளூர் செய்திகள்

பி.கொல்லஅள்ளியில் 3 வாரங்களாக பணம் பட்டுவாடா செய்யாததால் பால் கொள்முதல் நிலையம் முன்பு மகளிர் பால் உற்பத்தியாளர்கள் போராட்டம் நடத்திய காட்சி.
பணம் தராமல் இழுத்தடிப்பு: பால் உற்பத்தியாளர்கள் போராட்டம்
- 300-க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் பால் வழங்கி வருகின்றனர்.
- பால் வழங்காமல் பால் கொள்முதல் நிலையம் முன்பு நிர்வாகத்தை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பாலக்கோடு,
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே எர்ரனஅள்ளி ஊராட்சி பி.கொல்லஅள்ளியில் மகளிர் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கம் செயல்பட்டு வருகிறது. இச்சங்கத்திற்கு 300-க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் பால் வழங்கி வருகின்றனர்.
கடந்த 3 வாரங்களாக பால் உற்பத்தியாளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யாமல் இழுத்தடிப்பதால் பால் உற்பத்தியாளர்கள் தங்கள் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய முடியாமலும், கால்நடைகளுக்கு தேவையான தீவனங்களை வாங்க முடியாமல் கடும் அவதியடைந்துள்ளனர்.
மேலும் இந்த கூட்டுறவு சங்கத்தில் பல்வேறு முறைகேடுகளும், கையாடலும் நடைப்பெற்று ள்ளதாகவும் தெரிவிக்கும் உறுப்பினர்கள் இன்று காலை பால் வழங்காமல் பால் கொள்முதல் நிலையம் முன்பு நிர்வாகத்தை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இச்சம்பவம் அப்பதிகுதி யில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.






