search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பதிவுசான்று பெறாத விதைகளை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை-துணை இயக்குனர் எச்சரிக்கை
    X

    பதிவுசான்று பெறாத விதைகளை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை-துணை இயக்குனர் எச்சரிக்கை

    • சங்கரன்கோவில், திருவேங்கடம் பகுதியில் உள்ள விதை விற்பனை நிலையங்களில் விவசாயிகளுக்கு தேவையான பருத்தி, மக்காச்சோளம் விதைகள் உள்ளது.
    • பதிவுச்சான்று விதை உற்பத்தியாளரால் விண்ணப்பம் செய்து பெறப்படுகிறது.

    தென்காசி:

    நெல்லை விதை ஆய்வு துணை இயக்குனர் சுஜாதாபாய் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில், திருவேங்கடம் பகுதியில் உள்ள விதை விற்பனை நிலையங்களில் விவசாயிகளுக்கு தேவையான பருத்தி, மக்காச்சோளம் விதைகள் உள்ளது.

    விதை விற்பனை நிலையங்களில் பதிவுச்சான்று, முளைப்புத்திறன் சான்று பராமரிக்கப்பட வேண்டும். அறிவிக்கை செய்யப்படாத அனைத்து பயிர் ரகங்களுக்கும் பதிவுச்சான்று, விதைச்சான்று, அங்ககச்சான்று இயக்குனரால் 3 ஆண்டுகளுக்கு அனுமதித்து வழங்கப்படுகிறது. மேற்படி பதிவுச்சான்று விதை உற்பத்தியாளரால் விண்ணப்பம் செய்து பெறப்படுகிறது.

    விதை கட்டுப்பாட்டு சட்டம் 1983 பிரிவு 13(1)-ன்படி விதை விற்பனை நிலையங்களில் அறிவிக்கை செய்யப்படாத நெல், மக்காச்சோளம், காய்கனி உள்ளிட்ட அனைத்து பயிர் ரகங்களும் பதிவுச்சான்று, முளைப்புத்திறன் பரிசோதனை சான்று பெறப்பட்ட பின்னரே விற்பனை செய்யப்பட வேண்டும்.

    மேற்படி அறிவுரைகளை பின்பற்றாத விதை விற்பனையாளர்கள் மீது விதைச்சட்டம் 1966, விதைக்கட்டுப்பாட்டு சட்டம் 1983-ன்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×