search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் எஸ்.ஆர்.எம். குளோபல் மருத்துவமனையில் நோயாளிகள் கண்காணிப்பு முறை அறிமுகம்
    X

    செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் எஸ்.ஆர்.எம். குளோபல் மருத்துவமனையில் நோயாளிகள் கண்காணிப்பு முறை அறிமுகம்

    • தமிழ்நாட்டில் முதல் முறையாக இம்மருத்துவமனையில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.
    • மேம்படுத்தப்பட்ட மருத்துவ சேவை அளிக்கவும், நோயாளிகள் ஆபத்தான நிலைக்கு செல்வதை தவிர்க்க உதவும்.

    சென்னை:

    காட்டாங்குளத்தூர் எஸ்.ஆர்.எம். குளோபல் மருத்துவமனையில் தமிழ் நாட்டில் முதல் முறையாக செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் நோயாளிகள் கண்காணிப்பு முறை தொடங்கப்பட்டு உள்ளது. இது குறித்து எஸ்.ஆர்.எம். அறிவியல் தொழில் நுட்ப கல்வி நிறுவனத்தின் இணைவேந்தர் முனைவர் பா.சத்தியநாராயணன் கூறியதாவது:

    சென்னை காட்டாங்குளத்தூர் எஸ்.ஆர்.எம். அறிவியல் தொழில்நுட்ப நிறுவன வளாகத்தில் உலக தரத்தில் புதியதாக எஸ்.ஆர்.எம். குளோபல் என்ற மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை தொடங்கப்பட்டு உள்ளது.

    நோயாளிகளுக்கு அழுத்தம் இல்லாமல் நல்ல சூழ்நிலையுடன் சிகிச்சை அளிக்கும் வகையில் தற்போது 120 படுக்கை வசதியுடன் நவீன மருத்துவ சாதனங்களுடன், நவீன தொழில்நுட்ப வசதிகளுடன், நோயாளிகளின் தேவை மற்றும் பாதுகாப்புக்கு உகந்த வகையில் அமைக்கபட்டுள்ள இம்மருத்துவ மனையில் உள்நோயாளிகள், வெளி நோயாளிகளுக்கு என்று தனித்தனி பிரிவுகளுடன் உயர் தொழில்நுட்ப வசதியுடன் கூடிய நவீன ஆய்வக வசதி உள்ளது.

    இங்கு சிகிச்சை பெறும் நோயாளிகளுக்காக செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப முறை பயன்படுத்தி உருவாக்கப்பட்ட 'தொடர் பில்லா நோயாளிகள் கண்காணிப்பு திட்டம்' தமிழ்நாட்டில் முதல் முறையாக இம்மருத்துவமனையில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. புரட்சிகரமான இத்திட்டம் மேம்படுத்தப்பட்ட மருத்துவ சேவை அளிக்கவும், நோயாளிகள் ஆபத்தான நிலைக்கு செல்வதை தவிர்க்க உதவும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×