search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சங்கரன்கோவிலில் மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம்-ராஜா எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
    X

    மருத்துவ முகாமை ராஜா எம்.எல்.ஏ. தொடங்கி வைத்த காட்சி.

    சங்கரன்கோவிலில் மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம்-ராஜா எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்

    • முகாமில் தேர்வு செய்யப்பட்ட குழந்தைகளுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
    • முகாமில் கலந்து கொண்ட குழந்தைகளை மருத்துவர்கள் பரிசோதனை செய்தனர்.

    சங்கரன்கோவில்:

    சங்கரன்கோவில் வட்டார வளமையத்தின் சார்பில் 6 முதல் 18 வயது வரை உள்ள மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் சங்கரன்கோவில் கோமதி அம்பாள் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. தலைமை தாங்கி முகாமை தொடங்கி வைத்தார்.

    மேலும், முகாமில் தேர்வு செய்யப்பட்ட குழந்தைகளுக்கு நடைபயிற்சி உபகரணங்கள் (வாக்கர்), தேசிய அடையாள அட்டை போன்ற நலத் திட்ட உதவிகளை வழங்கினார். மேலும், மாற்றுத் திறனாளிகளுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் வழங்கப்பட்டு வரும் நலத்திட்ட உதவிகள் குறித்து பேசினார். வட்டார வளமைய மேற்பார்வையாளர் முத்துசெல்வி வரவேற்றார். ஆசிரியர் பயிற்றுநர் ஆனந்தராஜ் பாக்கியம் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

    மாவட்ட மாற்றுத்திற னாளிகள் நல அலுவலர் ஜெயப்பிரகாஷ் நோக்க உரை ஆற்றினார். கோமதி அம்பாள் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை தெய்வபிரியா வாழ்த்தி பேசினார். முகாமில் மனநல மருத்துவர் தேவிபிரபா கல்யாணி, காது மூக்கு தொண்டை மருத்துவர் ஜெயலட்சுமி, கண் மருத்துவர் முகமது அப்துல்லா, எலும்பு முறிவு மருத்துவர் விஸ்வநாத் பிரதாப்சிங் ஆகிய மருத்துவர்கள் கலந்து கொண்டு குழந்தைகளை பரிசோதனை செய்தனர்.

    தகுதியான குழந்தைகளுக்கு தேசிய அடையாள அட்டை மற்றும் வாக்கர் போன்ற உபகரணங்கள் உடனடியாக வழங்கப்பட்டது. மேலும், காது கேட்கும் கருவி, ஸ்மார்ட் கார்ட், ரெயில் பாஸ், பஸ் பாஸ், மாதாந்திர உதவி தொகை, பெற்றோர்களுக்கு தையல் எந்திரம், வீல் சேர், கேலிபர், ட்ரை சைக்கிள் போன்ற உபகரணங்கள் வழங்குவதற்கு தகுதியான குழந்தைகள் மருத்துவர்கள் பரிந்துரையின் பேரில் தேர்வு செய்யப்பட்டனர்.

    இதில் தி.மு.க. நகர செயலாளர் பிரகாஷ், இளைஞரணி மாவட்ட துணை அமைப்பாளர் கார்த்திக், மாணவரணி மாவட்ட துணை அமைப்பாளர் வீரமணி, தகவல் தொழில்நுட்ப அணி ஜெயகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் சிறப்பாசிரியர் சிவகுமார் நன்றி கூறினார்.

    Next Story
    ×