என் மலர்tooltip icon

    சிவகங்கை

    மத்திய அரசு ஜல்லிக்கட்டு நடத்த அனைத்து நடவடிக்கைகளும் எடுத்து வருவதால் இந்த ஆண்டு பொங்கல் தமிழக மக்களுக்கு இனிப்பாக இருக்கும் என பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா தெரிவித்துள்ளார்.
    தேவகோட்டை:

    மத்திய அரசு ஜல்லிக்கட்டு நடத்த அனைத்து நடவடிக்கைகளும் எடுத்து வருவதால் இந்த ஆண்டு பொங்கல் தமிழக மக்களுக்கு இனிப்பாக இருக்கும் என பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா தெரிவித்துள்ளார்.

    சிவகங்கை மாவட்ட பா.ஜ.க. செயற்குழு கூட்டம் தேவகோட்டையில் நடந்தது. இதில் கலந்து கொண்ட கட்சியின் தேசிய செயலாளர் எச். ராஜா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழகத்தில் சட்டம் ஓழுங்கு மிகப்பெரிய அளவில் சீர்கெட்டுள்ளது. எந்த ஓரு குற்றத்திற்கும் தண்டனைகள் உடனடியாக வழங்க வழிசெய்ய வேண்டும். இதுவரை பதிவாகியுள்ள வழக்குகள் அனைத்திலும் குற்றவாளிகளை தண்டிக்க காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். உள்ளாட்சி தேர்தலில் அனைத்து பொறுப்புகளுக்கும் பாஜக போட்டியிடும்.

    கச்சத்தீவு குறித்து பேச தி.மு.க.விற்கும், அ.தி.மு.க. விற்கும் தார்மீக உரிமை இல்லை. 1974 இந்திரா காந்தி கச்சத்தீவை தாரை வார்த்த போது, ஜனசங்கமாக இருந்த பாஜக மட்டுமே அதை எதிர்த்தது.

    கச்சத்தீவை பற்றி பேச ஜனசங்கம் பா.ஜ.க.விற்கு மட்டுமே தார்மீக உரிமை உண்டு. 42 ஆண்டுகளுக்கு பிறகு சர்வதேச ஓப்பந்தத்தில் மாற்றம் கொண்டு வருவது சாத்தியமில்லை.

    தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவது குறித்து மத்திய அரசாங்கம் இலங்கை அரசுடன் பேசி வருகிறது. அதுவரை இந்திய மீனவர்கள் பொறுத்திருக்க வேண்டும்.

    ஜல்லிகட்டை பொறுத்த வரை மிருகவதை சட்டத்தில் இருந்து விலக்கு கொடுத்து சட்ட வரைவு திட்டமாக்க கேபினட்டுக்கு அனுப்பட்டிருக்கிறது. கேபினட் அனுமதிக்குப்பிறகு மழைக்கால கூட்டத் தொடரில் பாராளுமன்ற இரு அவைகளிலும் நிறைவேற்றப்படும்.அதனால் இந்த பொங்கல் பண்டிகை தமிழக மக்களுக்கு இனிப்பான பொங்கலாக இருக்கும். 13 ஸ்மார்ட் சிட்டிகளுக்கு ரூ. 58 ஆயிரம் கோடி ஓதுக்கப்பட்டுள்ளது. தேசிய நெடுஞ்சாலை பணிகளுக்கு இந்த ஆண்டு மட்டும் 10 ஆயிரம் கோடி ஓதுக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.
    காரைக்குடியில் மினி பஸ் டிரைவர் அடித்து கொலை செய்யப்பட்டார். மர்ம ஆசாமிகளை போலீசார் தேடி வருகிறார்கள்.

    காரைக்குடி:

    காரைக்குடி நக்கீரன் தெருவை சேர்ந்த சுப்பிரமணியன் மகன் ஹரிகரன் (வயது22), மினி பஸ் டிரைவர். அதே பகுதியை சேர்ந்தவர் ரம்யா. இவர் ஒரு கல்லூரியில் படித்து வந்தார். அப்போது மினி பஸ்சில் பயணம் செய்தபோது ஹரிஹரனுக்கும், ரம்யாவுக்கும் காதல் ஏற்பட்டது. பின்னர் இருவரும் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர்.

    இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் குடும்பத்திற்குள் எதிர்ப்பு இருந்து வந்தது.

    இந்த நிலையில் ஹரிகரன் அடிக்கடி குடித்து விட்டு வருவதால் கணவன்- மனைவிக்குள் தகராறு ஏற்பட்டது. இதனால் கடந்த சில நாட்களுக்கு முன்பு கோபித்து கொண்டு ரம்யா தாய் வீட்டிற்கு சென்று விட்டார்.

    தனியாக வசித்து வந்த நிலையில் இன்று அதிகாலையில் வீட்டின் அருகே ஹரிகரன் தலையில் தாக்கப்பட்டும், கழுத்து நெரிக்கப்பட்ட நிலையிலும் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார்.

    இதை அறிந்த அக்கம் பக்கத்தினர் காரைக்குடி வடக்கு போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். இன்ஸ்பெக்டர் பிச்சை பாண்டியன் சம்பவ இடத்திற்கு சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார்.

    மேலும் இக்கொலை குறித்து வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை தேடி வருகிறார்.

    இந்த கொலை அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    காரைக்குடியில் கலைவாணி சதுரங்க அகாடமி சார்பில் மாவட்ட அளவிலான சதுரங்க போட்டி நடைபெற்றது.
    காரைக்குடியில் கலைவாணி சதுரங்க அகாடமி சார்பில் மாவட்ட அளவிலான சதுரங்க போட்டி நடைபெற்றது. சதுரங்க கழக மாவட்ட தலைவர் கருப்பையா போட்டியை தொடங்கி வைத்தார். செயலாளர் கண்ணன், பொருளாளர் பிரகாஷ், கலைவாணி சதுரங்க கழக தலைவர் கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆசிரியை எலிசபெத்ராணி, எஸ்.எம்.எஸ். பள்ளி ஆசிரியர் பிரகாஷ் மணிமாறன் ஆகியோர் போட்டியை ஒருங்கிணைத்தனர். போட்டியில் நடுவர்களாக பாலசுப்பிரமணியன், பாலு, மெய்யர், அருண்குமார், ரவி, சண்முகசுந்தரம் ஆகியோர் செயல்பட்டனர்.

    இதில் வயது அடிப்படையில் பல்வேறு பிரிவுகளாக போட்டிகள் நடத்தப்பட்டன. இதில், 9 வயது பிரிவில் கார்மல் பள்ளி கிட்டேஷ் முதல் இடமும், கலைவாணி பள்ளி பிரபாகரன் 2–ம் இடமும், 11 வயது பிரிவில் அரசு பெண்கள் பள்ளி மாணவி சுபாஸ்ரீ முதல் இடமும், கே.வி. பள்ளி காலூப் 2–ம் இடமும், 13 வயது பிரிவில் கலைவாணி பள்ளி கபிலேசுவரன் முதல் இடமும், கார்த்திக் 2–ம் இடமும் பெற்றனர். 15 வயது பிரிவில் இன்பன்ட் ஜீசஸ் பள்ளி மனோஜ் முதல் இடமும், செட்டிநாடு பப்ளிக் பள்ளி ஹரிஷ் 2–ம் இடமும், 25 வயது பிரிவில் மனோஜ்குரு முதல் இடமும், செந்தமிழ்க் குமரன் 2–ம் இடமும் பெற்றனர்.

    இந்த போட்டிகளில் ஒட்டு மொத்த சாம்பியன் பட்டத்தை இன்பன்ட் ஜீசஸ் பள்ளியும், 2–ம் இடத்தை கலைவாணி மெட்ரிக் பள்ளியும் பெற்றன. வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
    சிவகங்கை அருகே கோவில் திருவிழாவில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி பெண்களிடம் நகை பறித்தவரை போலீசார் கைது செய்தனர்.
    சிவகங்கை:

    சிவகங்கையை அடுத்த நாட்டரசன் கோட்டையில் உள்ள பிரசித்தி பெற்ற கண்ணுடைய நாயகி அம்மன் கோவில் திருவிழாவையொட்டி கடந்த மாதம் வெள்ளிரதம் நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியை காண வந்த 4 பெண்களிடம் கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி மர்மநபர் நகைகளை திருடிச் சென்றுள்ளார்.

    இதுதொடர்பாக சிவகங்கை தாலுகா சப்–இன்ஸ்பெக்டர் பூமிநாதன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடந்து வந்தது. தனிப்படையினர் நடத்திய விசாரணையில் மதுரை மாவட்டம் மேலூரை அடுத்த பதினெட்டான்குடியைச் சேர்ந்த ஆறுமுகம் (வயது 42) என்பவர் கோவில் திருவிழாவில் கூட்டநெரிசலை பயன்படுத்தி பெண்களிடம் நகை பறித்தது தெரியவந்தது.

    இதனைத்தொடர்ந்து போலீசார் ஆறுமுகத்தை கைது செய்தனர். இவர் மீது ஏற்கனவே பல்வேறு திருட்டு வழக்குகள் பல்வேறு போலீஸ் நிலையங்களில் நிலுவையில் உள்ளது. இவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் சிவகங்கையை அடுத்த மலம்பட்டியில் உள்ள ஒரு வீட்டில் புகுந்து நகை, பணம் ஆகியவற்றை திருடியதும் தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து அவரிடம் இருந்த 21 பவுன் தங்கநகையை போலீசார் பறிமுதல் செய்தனர்.
    சிங்கம்புணரி அருகே டிப்பர் லாரியில் மின்கம்பி உரசியதில் மின்சாரம் தாக்கி 2 வாலிபர்கள் பலியாயினர். டிரைவர் படுகாயம் அடைந்தார்.
    சிங்கம்புணரி

    சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியை அடுத்த காளாப்பூர் கிராமத்தில் திருப்பதி ராஜா என்பவருக்கு சொந்தமான செங்கல்சூளை உள்ளது. இங்கு செங்கல் வாங்க கல்லலை அடுத்த ஆலங்குளம் பகுதியை சேர்ந்த ரூபன் என்பருக்கு சொந்தமான டிப்பர் லாரியை எடுத்துக் கொண்டு கல்லலைச் சேர்ந்த ரமேஷ் (வயது 35) என்பவர் வந்துள்ளார். அவருடன் சுரேஷ் என்பவரும் உடன் வந்துள்ளார். செங்கல் சூளைக்குள் வந்த டிப்பர் லாரி அங்கேயே பழுதாகி நின்றது.

    இதனைத்தொடர்ந்து ரமேஷ் லாரியை சரி செய்ய காரைக்குடியிலிருந்து லாரி மெக்கானிக்கான குழந்தை (28) என்பவரை அழைத்து வந்துள்ளார். மெக்கானிக் குழந்தையும், டிரைவர்கள் சுரேஷ், ரமேஷ் 3 பேரும் சேர்ந்து லாரியை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது லாரியின் பின்புறம் உள்ள பகுதியை தானியங்கி உயர்த்தி மூலம் ரமேஷ் உயர்த்தியுள்ளார்.

    அப்போது, எதிர்பாராத விதமாக மேலே சென்ற உயர் மின்னழுத்த மின்கம்பி மீது லாரி உரசியது. இதனால் லாரியில் மின்சாரம் பாய்ந்து பழுதுபார்க்கும் பணியில் ஈடுபட்டிருந்த டிரைவர் சுரேஷ் மற்றும் மெக்கானிக் குழந்தை ஆகியோர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி இறந்தனர். அவர்களது உடல் தீப்பற்றி எரியத் தொடங்கியது. தொடர்ந்து லாரியின் பின்பக்க டயர்களும் தீப்பிடித்து எரிந்தன.
    தீயணைப்பு துறையினர்

    இதுகுறித்து தகவலறிந்த சிங்கம்புணரி தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இந்த சம்பவத்தின் போது டிப்பர் லாரியை இயக்கிய ரமேஷ் மின்சாரம் தாக்கியதில் லாரியிலிருந்து தூக்கிவீசப்பட்டு படுகாயமடைந்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் அவர் சிங்கம்புணரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இந்த விபத்து குறித்து எஸ்.வி.மங்கலம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சிங்கம்புணரி அருகே தடையை மீறி சிறிப் பாய்ந்த காளைகளால் போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.
    சிங்கம்புணரி:

    தமிழ்நாட்டில் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியை அடுத்த புதூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட முருக்குபட்டியில் ஊர் கோவில் காளைகளுக்கு முறையாக அனுமதி பெற்று பொங்கல் வைத்தும், துண்டுகள் கட்டியும் மரியாதை செய்து கிராமத்தினர் காளைகளை வணங்கி சென்றனர்.

    இந்த நிலையில் வேறு கிராமங்களில் இருந்து ஜல்லிக்கட்டு காளைகள் வராதபடி பல இடங்களில் சோதனை சாவடி அமைத்து போலீசார் கண்காணித்து வந்தனர். இருப்பினும் சுத்துபட்டு கிராமங்களில் இருந்து காட்டு வழிகளில் வந்து குவிந்த சுமார் 500-க்கும் மேற்பட்ட ஜல்லிக்கட்டு காளைகளை சிலர் திடீர் என அவிழ்த்து விட்டனர். இதனால் அதிர்ச்சி அடைந்த சிவகங்கை மாவட்ட காவல்துறையினர் தடுத்ததும் ஜல்லிக்கட்டு காளைகளை பக்கத்து மாவட்டமான புதுக்கோட்டை மாவட்ட எல்லையில் வயல் வெளியில் அவிழ்த்து விட்டனர்.

    முருக்குபட்டியில் நடக்கும் மஞ்சுவிரட்டு தேதியை இணையத்தில் (முகபுத்தகத்தில்) பதிவிட்டதால் தென் மாட்டங்கள் முழுவதிலும் இருந்தும் மாடுபிடி வீரர்களும் மஞ்சுவிரட்டு ஆர்வலர்களும் வந்து குவிந்தனர்.
    ×