என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சேலம் வெள்ளி வியாபாரி கொலை: கூலிப்படையை ஏவி தீர்த்துக்கட்டிய தி.மு.க. நிர்வாகி
    X

    உதய சங்கர்.

    சேலம் வெள்ளி வியாபாரி கொலை: கூலிப்படையை ஏவி தீர்த்துக்கட்டிய தி.மு.க. நிர்வாகி

    • உதயசங்கர் (வயது 30). வெள்ளி வியாபாரி. இவர் மீது ஓமலூர் போலீஸ் நிலையத்தில் வெள்ளிக்கட்டி வழிப்பறி வழக்கு உள்ளது.
    • 4 பேர் கும்பல், உதயசங்கரை ஓட ஓட விரட்டி வெட்டி கொலை செய்தனர்.

    சேலம்:

    சேலம் அரிசிபாளையம் வண்டிப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் உதயசங்கர் (வயது 30). வெள்ளி வியாபாரி.

    இவர் மீது ஓமலூர் போலீஸ் நிலையத்தில் வெள்ளிக்கட்டி வழிப்பறி வழக்கு உள்ளது. இவருடன் கொண்டலாம்பட்டி போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றிய சரவணன் என்பவரும் இந்த வழிப்பறி வழக்கில் கைதானார்.

    வெள்ளி தொழில் செய்து வந்த உதயசங்கர், புல்லட்டில் வலம் வந்தார்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை பள்ளப்பட்டி கூட்டுறவு சொசைட்டி பகுதியில் நண்பர் அலெக்ஸ்பாண்டியனுடன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 4 பேர் கும்பல், உதயசங்கரை ஓட ஓட விரட்டி வெட்டி கொலை செய்தனர். அவரது நண்பர் அலெக்ஸ்பாண்டியன் லேசான வெட்டுக்காயங்களுடன் உயிர் தப்பினார்.

    தி.மு.க. நிர்வாகி கைது

    இந்த கொலை சம்பவம் குறித்து பள்ளப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து, சம்பவ இடத்தில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி. காமிராக்களில் பதிவான காட்சிகளை பார்வையிட்டு, கொலையாளிகளை தீவிரமாக தேடி வந்தனர்.

    இந்த நிலையில் கொலையாளிகளான காமலாபுரத்தை சேர்ந்த பன்னீர்செல்வம் (23) மற்றும் 3 ரோடு ஜெயா நகரை சேர்ந்த ஆனந்த் (26) ஆகியோர் சேலம் டவுன் போலீஸ் உதவி கமிஷனர் வெங்கடேசன் முன்பு சரண் அடைந்தனர்.

    இதையடுத்து இருவரிடமும் பள்ளப்பட்டி போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இதில் உதயசங்கரை கொலை செய்ய சேலம் தி.மு.க. 26-வது வார்டு செயலாளர் முருகன் (45) ஆட்களை ஏவி விட்டது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் நேற்று மாலை கைது செய்தனர்.

    பரபரப்பு தகவல்

    இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் போலீசாருக்கு பரபரப்பு தகவல் கிடைத்தது.

    கொலையுண்ட உதயசங்கர், வசதியானவர்களை மிரட்டி பணம் பறிக்கும் வேலையை செய்து வந்துள்ளார். அதுபோல் தி.மு.க. வார்டு செயலாளர் முருகனிடமும் உதயசங்கர் மிரட்டி பணம் பறித்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்ததால் அவரை தீர்த்துக்கட்ட முருகன் முடிவு செய்தார்.

    இதற்காக ரூ.1.50 லட்சம் பேரம் பேசி, முதற்கட்டமாக கூலிப்படைக்கு ரூ.10 ஆயிரம் கொடுத்து, கூலிப்படையினரை ஏவி விட்டது ெதரியவந்தது.

    மேலும் இந்த கொலையில் ெதாடர்புடைய சந்தோஷ், தீனா ஆகியோர் தலைமறைவாக உள்ளனர். இவர்கள் இருவரும் பன்னீர்செல்வம், ஆனந்த் ஆகியோரின் கூட்டாளிகள் ஆவர். தலைமறைவாக உள்ள 2 பேரையும் தனிப்படை போலீசார் தீவிரமாக ேதடி வருகின்றனர்.

    Next Story
    ×