என் மலர்
உள்ளூர் செய்திகள்

சேலம் மாநகரில் 7 மாதங்களில் 89 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
- அதேபோல் ரேசன் அரிசி கடத்துபவர்கள், விபசார தொழிலை செய்வோரும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்படுகின்றனர்.
- இனிமேல் அவர்கள் குற்றச் செயல்களில் ஈடுபடாமல் இருக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
சேலம்:
சேலம் மாவட்டத்தில் கொலை, கொள்ளை, வழிப்பறி ேபான்ற குற்றச்செயல்களில் ஈடுபடுவோர், பொது அமைதிக்கு பாதிப்பு ஏற்படுத்துவோர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்படுகின்றனர். இதன் மூலம் அவர்கள் ஓராண்டு காலம் ெஜயிலில் இருந்து வெளியே வரமுடியாது.
அதேபோல் ரேசன் அரிசி கடத்துபவர்கள், விபசார தொழிலை செய்வோரும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்படுகின்றனர். சேலம் மாநகரில் நடப்பாண்டில் கடந்த 7 மாதங்களில் இதுவரை 89 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. இது குறித்து போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்கள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படுகிறார்கள். பலமுறை எச்சரிக்கை விடுத்தும் கேட்காமல் சட்டத்தை மீறுபவர்கள் மீது குண்டர் பாய்கிறது. இனிமேல் அவர்கள் குற்றச் செயல்களில் ஈடுபடாமல் இருக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இவர்களுக்கு மாவட்ட நீதிமன்றங்களில் ஜாமீன் கிடைக்காது. சரியான காரணங்கள் இல்லாமல் யார் மீதும் வழக்கு பாயாது. இதற்கான ஆவணங்களை தயார் செய்ய ஒரு வழக்குக்கு அரசு ரூ.7 ஆயிரம் வரை செலவு செய்கிறது என்றனர்.