என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மேட்டூர் ரவுடி கொலையில் 2 பேர் கைது
    X

    மேட்டூர் ரவுடி கொலையில் 2 பேர் கைது

    • கருமலைகூடல் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
    • இருவரும் பிரபல ரவுடி சிபியை கொலை செய்தது தெரிய வந்தது.

    மேட்டூர்:

    சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே கருமலைக்கூடல் பகுதியை சேர்ந்தவர் சிபி (வயது 25). பிரபல ரவுடியான இவர் மீது கொலை, வழிப்பறி மற்றும் அடிதடி உள்ளிட்ட வழக்குகள் உள்ளன.

    வெட்டிக் கொலை

    இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு, மேட்டூர் புதுச்சாம்பள்ளி குருவாகாடு பகுதியில் உள்ள ரெயில்வே தண்டவாளம் அருகே, சிபி மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இது குறித்து கருமலைக்குடல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேட்டூர் டி.எஸ்.பி. மரியமுத்து தலைமையில் கருமலைக்கூடல் இன்ஸ்பெக்டர் குமரன், மேச்சேரி இன்ஸ்பெக்டர் சண்முகம் ஆகியோர் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டு தீவிரமாக கொலையாளிகளை தேடி வந்தனர்.

    வாகன தணிக்கை

    இந்த நிலையில் மேட்டூர் அனல்மின் நிலையம் அருகே கருமலைகூடல் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த சூர்யா (21), ரவிச்சந்திரன் (20) ஆகிய 2 பேரை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி விசாரணை செய்தனர்.

    2 பேர் கைது

    இதில், இருவரும் பிரபல ரவுடி சிபியை கொலை செய்தது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து 2 பேரையும் கைது செய்த போலீசார், அவர்கள் ஓட்டி வந்த இருசக்கர வாகனம் மற்றும் கொலைக்கு பயன்படுத்திய கத்தி ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

    மேலும் அவர்கள் எதற்காக ரவுடி சிபியை கொலை செய்தனர்? இந்த கொலையில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா? என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×