என் மலர்
உள்ளூர் செய்திகள்

தொப்பையாறு அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு
- தருமபுரி மாவட்டத்தில் கடந்த மாதங்களில் தொடர்ந்து கன மழை பெய்ததையடுத்து அணை முழு கொள்ளளவை எட்டியது.
- 10 க்கும் மேற்பட்ட கிராமங்களில் 5330 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
தொப்பூர்,
தருமபுரி மாவட்டம் தொப்பூர் அடுத்த வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ள தொப்பையாறு அணை 50 அடி உயரம் கொண்டது.
தொப்பையாறு அணைக்கு நீராதாரமாக தருமபுரி மாவட்ட பகுதிகள் மட்டுமல்லாமல் சேலம் மாவட்டம் ஏற்காடு மலையிலிருந்தும் ஆறுகள் வழியாக ஆனை மடுவு, ராமமூர்த்தி நகர், பொம்மிடி வழியாக வேப்பாடி ஆற்றின் மூலம் தண்ணீர் தொப்பையாறு அணைக்கு வருகிறது.
தருமபுரி மாவட்டத்தில் கடந்த மாதங்களில் தொடர்ந்து கன மழை பெய்ததையடுத்து அணை முழு கொள்ளளவை எட்டியது.
உபரி நீர் வெளியேற்றப்பட்டு நிறுத்தபட்ட நிலையில் கடந்த இரண்டு மாதங்களாக உபரி நீர் முழுவதும் தேக்கி வைக்கபட்டது.
தொப்பையாறு அணையில் இருந்து வலதுபுற மற்றும் இடது புற வாய்க்கால்கள் மூலம் தருமபுரி மற்றும் சேலம் மாவட்ட பகுதிகளில் செக்காரபட்டி, தொப்பூர், கம்மம்பட்டி, வெள்ளார், தெத்திகிரிபட்டி, மல்லிகுந்தம் உள்ளிட்ட 10 க்கும் மேற்பட்ட கிராமங்களில் 5330 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
10.2.23 முதல் 21.4.23 வரை 70 நாட்களுக்கு 266 மில்லியன் கன அடி தண்ணீர் திறக்கபடவுள்ளது.
அணையின் பகுதிகளை ஒட்டியுள்ள மக்கள் மற்றும் பாசனப் பரப்பை ஒட்டியுள்ள மக்கள் அதிக அளவில் விவசாயத்தையே நம்பி உள்ளனர். பெரும்பாலும் சாமந்தி, மிளகாய், நெல் போன்றவற்றை அதிகம் பயிர் ஈடுகின்றனர்.
இதனையடுத்து இன்று காலை தொப்பையாறு அணையில் இருந்து தண்ணீரை பாசனத்திற்காக தருமபுரி மாவட்ட கலெக்டர் சாந்தி திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியின் போது தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி வெங்க டேஸ்வரன், தொப்பையாறு அணை யின் செயற்பொறியாளர் குமார், உதவி செயற்பொறி யாளர் பாபு, உதவி பொறியாளர் மோகன பிரியா, மாலதி, இடது புற கால்வாய் பாசன குழு தலைவர் மல்லமுத்து, ஊராட்சி மன்ற தலைவர் தனலட்சுமி முனுசாமி, துணை தலைவர் ராஜா, பாகலஹள்ளி ஊராட்சி மன்ற தலைவர் முருகன், ஏர்ரபையனஹள்ளி ஊராட்சி மன்ற தலைவர் சிலம்பரசன் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.






