search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மன வளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கு நலத்திட்ட உதவி
    X

    ராணிப்பேட்டை விஷ்வாஸ் மனவளர்ச்சி குன்றிய பள்ளியில் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு அமைச்சர் காந்தி நலத்திட்ட உதவிகளை வழங்கிய போது எடுத்த படம் உடன் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் மற்றும் பலர் உள்ளனர்.

    மன வளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கு நலத்திட்ட உதவி

    • 92 நபர்களுக்கு இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்
    • அமைச்சர் காந்தி வழங்கினார்

    ராணிப்பேட்டை:

    ஒன்றுக்கு மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளின் மேம்பாட்டிற்கான தேசிய நிறுவனம், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, ராணிப்பேட்டை விஷ்வாஸ் மனவளர்ச்சி குன்றிய பள்ளி ஆகியோர் இணைந்து நடத்தும் உதவி உபரகணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று விஷ்வாஸ் மனவளர்ச்சி குன்றியோருக்கான சிறப்பு பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கினார். சட்டமன்ற உறுப்பினர் ஜெ.எல்.ஈஸ்வரப்பன், என்.ஐ.இ.பி.எம்.டி ஒருங்கிணைப்பாளர் சந்தோஷ்கண்ணா, மனவளர்ச்சி குன்றிய தனியார் பள்ளி தாளாளர் கேத்தரின் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    விஷ்வாஸ் மனவளர்ச்சி குன்றியோருக்கான பள்ளி தாளாளர் கமலா காந்தி வரவேற்றார்.நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி கலந்துகொண்டு பேசினார்.

    இதனை தொடர்ந்து மத்திய அரசின் திட்டத்தின் கீழ் ராணிப்பேட்டை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி உபகரணங்கள் வழங்குவதற்கான சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு 394பயனாளிகள் தேர்வு செய்து ரூ.22லட்சம் மதிப்பீட்டில் 92 நபர்களுக்கு இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர், 101நபர்களுக்கு மோட்டார் பொருந்திய செயலி எந்திரம், 125 நபர்களுக்கு தமிழக முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் நவீன செயற்கை கை உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் காந்தி வழங்கினார்.

    நிகழ்ச்சியில் உதவி கலெக்டர் பூங்கொடி, விஸ்வாஸ் பள்ளி செயலாளர் மருத்துவர் ராஜேஸ்வரி, ஜிகே பள்ளி இயக்குனர்கள் வினோத் காந்தி, சந்தோஷ் காந்தி, நகர மன்ற தலைவர்கள் சுஜாதா வினோத், ஹரிணி தில்லை, தேவி பென்ஸ்பாண்டியன், ஒன்றிய குழு தலைவர்கள் வெங்கட்ரமணன், புவனேஸ்வரி, அசோக் உள்பட மாற்றுத்திறனாளிகளின் பெற்றோர்கள் பொது மக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    முடிவில் மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் சரவணகுமார் நன்றி கூறினார்.

    Next Story
    ×