என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஓராண்டு சாதனைகள் குறித்த புத்தகத்தை அமைச்சர் காந்தி வெளியிட்டார். அருகில் கலெக்டர் பாஸ்கர பாண்டியன், ஜெகத்ரட்சகன் எம்.பி., ஈஸ்வரப்பன் எம்.எல்.ஏ.
ராணிப்பேட்டை மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு, கண்காணிப்பு குழு கூட்டம்
- மத்திய அரசு நிதி உதவியுடன் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து ஆய்வு.
- தமிழக அரசின் ஓராண்டு சாதனை புத்தகம் வெளியீடு. தமிழக அரசின் ஓராண்டு சாதனை புத்தகம் வெளியீடு
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள கூட்டரங்கில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு ஜெகத்ரட்சகன் எம்.பி. தலைமை தாங்கினார். கலெக்டர் பாஸ்கர பாண்டியன் வரவேற்றார். மாவட்ட வருவாய் அலுவலர் குமரேஷ்வரன் முன்னிலை வகித்தார்.
நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி கலந்து கொண்டு பேசினார்.
இந்த கூட்டத்தில் அனைத்து துறைகளிலும் மத்திய அரசு நிதி உதவியுடன் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்த ஆய்வு செய்யப்பட்டது. நிகழ்ச்சியில் ஈஸ்வரப்பன் எம்.எல்.ஏ., மாவட்ட ஊராட்சி குழு தலைவர் ஜெயந்தி திருமூர்த்தி, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க திட்ட அலுவலர், மாவட்ட ஊராட்சி செயலர், நகரமன்ற தலைவர்கள், ஒன்றியக்குழு தலைவர்கள், ஊராட்சிமன்ற தலைவர்கள், ஆகியோர் கண்காணிப்புக்குழு கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
முடிவில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் லோகநாயகி நன்றி கூறினார். முன்னதாக தமிழக அரசின் ஓராண்டில் செய்த சாதனைகள் குறித்த புத்தகத்தை அமைச்சர் காந்தி வெளியிட்டார்.






