என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ரூ.18 லட்சம் மதிப்பில் மேல்நிலை நீர் தேக்க தொட்டி
    X

    ரூ.18 லட்சம் மதிப்பில் மேல்நிலை நீர் தேக்க தொட்டி அடிக்கல் நாட்டிய காட்சி.

    ரூ.18 லட்சம் மதிப்பில் மேல்நிலை நீர் தேக்க தொட்டி

    • அடிக்கல் நாட்டினர்
    • ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்

    நெமிலி:

    நெமிலி அடுத்த ஆட்டுப்பாக்கம் ஊராட்சியில், குடிநீர் பிரச்சினையை போக்க பொதுமக்களின் கோரிக்கையினை ஏற்று, ஊராட்சி ஒன்றியத்தின் 15வது நிதிக்குழு மான்ய நிதியிலிருந்து ரூ.18 லட்சம் மேல்நிலை நீர் தேக்கத்தொட்டி அமைப்பதற்கான பூமிபூஜை நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதில் நெமிலி ஒன்றிய பெருந்தலைவர் பெ.வடிவேலு கலந்து கொண்டு, செங்கல் எடுத்து கொடுத்து அடிக்கல் நாட்டினார்.

    இந்நிகழ்ச்சியில் ஆட்டுப்பாக்கம் ஊராட்சி மன்றத் தலைவர் நித்யா ராமதாஸ், ஊராட்சி மன்ற துணைத்தலைவர், மன்ற உறுப்பினர்கள், அரிக்கிருஷ்ணன், ஒப்பந்ததாரர் வசந்தகுமார், கருணாநிதி ஆகியோர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×