என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ராணிப்பேட்டை சிப்காட் பகுதியில் புதிய சேமிப்பு கிடங்கு
    X

    தமிழ்நாடு சேமிப்பு கிடங்கில் கூடுதலாக ரூ.2.20கோடி மதிப்பீட்டில் புதிய சேமிப்பு கிடங்கு கட்டும் பணிக்கு அமைச்சர் ஆர்.காந்தி அடிக்கல் நாட்டிய போது எடுத்த படம்.

    ராணிப்பேட்டை சிப்காட் பகுதியில் புதிய சேமிப்பு கிடங்கு

    • அமைச்சர் ஆர்.காந்தி அடிக்கல் நாட்டினார்
    • ரூ.2.20 கோடியில் அமைக்கப்படுகிறது

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை சிப்காட் பகுதியில் உள்ள தமிழ்நாடு அரசு சேமிப்பு கிடங்கு நிறுவனம் வளாகத்தில் ரூ.2.20 கோடி மதிப்பீட்டில் புதிய சேமிப்பு கிடங்கு கட்டும் பணிக்கு பூமி பூஜை மற்றும் அடிக்கல் நாட்டும் விழா நடைபெற்றது.

    இந்த நிகழ்ச்சிக்கு கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கினார். ஆற்காடு எம்.எல்.ஏ. ஈஸ்வரப்பன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் ஜெயந்திதிருமூர்த்தி, ஒன்றிய குழு தலைவர் வெங்கட்ரமணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    மண்டல மேலாளர் ராஜ்குமார் வரவேற்றார்.நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி கலந்து கொண்டு ராணிப்பேட்டை சிப்காட் பகுதியில் உள்ள தமிழ்நாடு அரசு சேமிப்பு கிடங்கு நிறுவன வளாகத்தில் கூடுதலாக 3,400 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட சேமிப்பு கிடக்கு 1850 ச.மீ பரப்பளவில் ரூ.2.20 கோடி மதிப்பீட்டில் புதிய சேமிப்பு கிடங்கு கட்டும் பணிக்கு அமைச்சர் ஆர்.காந்தி அடிக்கல் நாட்டினார்.

    நிகழ்ச்சியில் உதவி பொறியாளர் ராஜேந்திரன், கிடங்கு மேலாளர் சீனிவாசகம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×