என் மலர்
உள்ளூர் செய்திகள்

டோல்கேட்டில் தே.மு.தி.க. சார்பில் மனித சங்கிலி போராட்டம்
- சுங்க சாவடி கட்டணத்தை உயர்த்தியதை கண்டித்து நடந்தது
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை மாவட்ட தே.மு.தி.க. சார்பில் தமிழ்நாடு முழுவதும் உள்ள 63 சுங்க சாவடிகளில் சுங்க சாவடி கட்டணத்தை உயர்த்திய மத்திய அரசை கண்டித்து போராட்டம் நடைபெற்றது.
அதன்படி வாலாஜா அடுத்த சென்ன சமுத்திரத்தில் உள்ள டோல்கேட்டில் ராணிப்பேட்டை மாவட்ட செயலாளர் பி.ஆர்.மனோகரன் தலைமையில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.
இதில் காஞ்சிபுரம் மாநகர் மாவட்ட செயலாளர் ஏகாம்பரம்,மாவட்ட அவை தலைவர் காசிநாதன், மாவட்ட துணை செயலாளர் பிரபாகரன், வாலாஜா ஒன்றிய செயலாளர் தியாகராஜன், பூபாலன், நகர செயலாளர்கள் செந்தில், குட்டி (எ) ஜஸ்டின் உள்பட கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Next Story






