என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருக்கழுக்குன்றம் பேரூராட்சியில் பொங்கல் விழா: இஸ்லாமிய பெண் கவுன்சிலர் தீபாராதனை காட்டி வழிபட்டார்
    X

    திருக்கழுக்குன்றம் பேரூராட்சியில் பொங்கல் விழா: இஸ்லாமிய பெண் கவுன்சிலர் தீபாராதனை காட்டி வழிபட்டார்

    • பேரூராட்சி கவுன்சிலர்கள், ஊழியர்கள், துப்புரவு பணியாளர்கள், முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர்.
    • 150க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்களுக்கு புத்தாடை, பொங்கல் பரிசுகள் வழங்கப்பட்டது.

    மாமல்லபுரம்:

    செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் பேரூராட்சி அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் விழா பேரூராட்சி தலைவர் யுவராஜ் முன்னிலையில் நடைபெற்றது. பேரூராட்சி கவுன்சிலர்கள், ஊழியர்கள், துப்புரவு பணியாளர்கள், முக்கிய பிரமுகர்கள் என பலர் பங்கேற்றனர்.

    பொங்கல் விழாவின்போது இஸ்லாமிய சமுதாய பெண் கவுன்சிலர் தௌலத் பீவி தீபாராதனை காட்டி வழிபட்டார். இது அங்கு வந்திருந்த அனைவரிடமும் சமத்துவ உணர்வை ஏற்படுத்தியது. 150க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்களுக்கு புத்தாடை, பொங்கல் பரிசுகள் வழங்கப்பட்டது.

    Next Story
    ×