என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    போச்சம்பள்ளி இ.எஸ்.ஐ. அலுவலகத்தில் பதிய வரும் தொழிலாளர்கள் அலைகழிப்பு
    X

    போச்சம்பள்ளி இ.எஸ்.ஐ. அலுவலகத்தில் நீண்ட வரிசையில் காத்திருக்கும் தொழிலாளர்களை படத்தில் காணலாம்.

    போச்சம்பள்ளி இ.எஸ்.ஐ. அலுவலகத்தில் பதிய வரும் தொழிலாளர்கள் அலைகழிப்பு

    • இ.எஸ்.ஐ. அலுவலகத்தில் பதியும்போது, தொழிலாளர்களுக்கான அடையாள விண்ணப்பத்துடன், ஒரு நோட்டும் கொடுக்கப்பட வேண்டும்.
    • தற்போது இடப்பற்றாக்குறை காரணமாக கிங் சைஸ் அட்டை போட்ட நோட்டு கேட்டுள்ளோம்.

    மத்தூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி சிப்காட்டில் இயங்கி வரும் மிகப்பெரிய தனியார் நிறுவனங்களில் சுமார் 25-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

    தொழிற்சாலைகளில் பணிபுரியும் அனைத்து தொழிலாளர்களும், தொழிலாளர் அரசு ஈட்டுறுதி மருந்தக (ESI) அலுவலகத்தில் தங்களின் குடும்பங்கள் பற்றிய விபரங்களை பதிய வேண்டும். இப்படி பதிவதன் மூலம் தொழிலாளர் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு உடல் நலக்குறைவு ஏற்படின், இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் இலவச சிகிச்சை பெற முடியும்.

    இதற்காக போச்சம்பள்ளி சந்தூர் சாலையில் உள்ள இ.எஸ்.ஐ. அலுவலகத்தை தினமும் காலை முதல் தொழிலாளர்கள் 100-க்கும் மேற்பட்டோர் பதிவதர்காக வருகின்றனர்.

    இ.எஸ்.ஐ. அலுவலகத்தில் பதியும்போது, தொழிலாளர்களுக்கான அடையாள விண்ணப்பத்துடன், ஒரு நோட்டும் கொடுக்கப்பட வேண்டும்.

    ஆரம்பத்தில் லாங் சைஸ் பைன்டிங் அட்டை போட்ட நோட்டு வாங்கிக்கொண்டிருந்த அலுவலக ஊழியர்கள், தற்போது கிங் சைஸ் அட்டை போட்ட நோட்டு வேண்டுமென கூறுவதாகவும், மார்கெட்டிலேயே இல்லாத கிங் சைஸ் அட்டை போட்ட நோட்டுக்கு நாங்கள் எங்கு போவது என தொழிலாளர்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.

    அவர்கள் கேட்டும் நோக்கு கிடைக்காமல் தொழிலாளர்கள் தினமும் கடை கடையாய் திரிந்தும் நோட்டு கிடைக்காமல் அலுவலகத்தின் முன்பு காத்திருக்க வேண்டிய நிலை உள்ளதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து தொழிலாளர் ஒருவர் கூறுகையில், நாங்கள் எங்கள் பகுதியில் கிடைக்கும் ஒரு நோட்டை வாங்கி வந்தால் அதை வாங்காமல் திருப்பி அனுப்பி விடுகின்றனர்.

    பல மணி நேரம் காத்திருந்து உள்ளே சென்று திருப்பப்படுவதால் மிகுந்த மன வேதனை அடைகிறோம்.

    மேலும் ஏதோ ஒரு நோட்டை பெற்று க்கொள்ளாமல், கிங் சைஸ் அட்டை போட்ட நோட்டு மட்டுமே வேண்டுமென கூறி தொழிலாளர்களை அலைகழிக்க வைக்கின்றனர் என தெரிவித்தார். இதுகுறித்து போச்சம்பள்ளி இ.எஸ்.ஐ. மருத்துவர் முனுசாமியிடம் கேட்டபோது, போச்சம்பள்ளி சிப்காட்டில் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உள்ளனர்.

    இவர்கள் அனைவரும் எங்கள் அலுவலகத்தில் புதிய நோட்டு கொடுத்து பதிந்து வைத்துக்கொள்ள வேண்டும். இதுநாள வரை லாங் சைஸ் நோட்டு வாங்கிக ்கொண்டிருந்தோம்.

    ஆனால் தற்போது இடப்பற்றாக்குறை காரணமாக கிங் சைஸ் அட்டை போட்ட நோட்டு கேட்டுள்ளோம். 25 ஆயிரம் நோட்டுகளை வைக்கக்கூடிய போதுமான கட்டிடத்தை சம்மந்தப்பட்ட அதிகாரிகள் தேர்வு செய்யாத காரணத்தால், போதிய இடம் இல்லாத காரணத்தால் கிங் சைஸ் அட்டை போட்ட நோட்டு பெறுகிறோம் என தெரிவித்தார்.

    நீங்கள் கேட்கும் நோட்டு கிடைக்காமல் தொழிலாளர்கள் அலைகழிக்கப்படுவது குறித்த கேட்டதற்கு, இனி வரும் காலங்களில் லாங் சைஸ் நோட்டு மற்றும் கிங் சைஸ் நோட்டு என அனைத்தையும் பெற்றுக்கொள்கிறோம் என தெரிவித்தார்.

    Next Story
    ×