search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மொரப்பூர் வனசரகத்தில் மரக்கன்றுகள்  நடவு பணி தொடக்கம்
    X

     மொரப்பூர் வனச்சரகத்தில் பாதிக்கப்பட்ட காடுகளின் மறுசீரமைப்புத் திட்டம் மூலம் கவரமலை வனப்பகுதியில் நடுவதற்காக தயார் செய்யப்பட்டு வரும் மரக்கன்றுகள்.

    மொரப்பூர் வனசரகத்தில் மரக்கன்றுகள் நடவு பணி தொடக்கம்

    • வேம்பு, புங்கன், புளி, நெல்லி உள்ளிட்ட 13 வகையான மரக்கன்றுகள் சுமார் 70 ஆயிரம் நடப்பட உள்ளது.
    • சில ஆண்டுகளில் மரங்களின் அடர்த்தி அதிகரிக்கும் வாய்புள்ளதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

    கடத்தூர்,

    தமிழகத்தில் பாழடைந்த 33.290 ஹெக்டேர் வன நிலத்தை அடுத்த 5 ஆண்டுகளில் மீட்கும் வகையில் பாதிக்கப்பட்ட காடுகளின் மறுசீரமைப்புத் திட்டத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி விவசாயம் மற்றும் ஊரக வளர்ச்சிக்கான தேசிய வங்கி ரூ.457 கோடி கடனுதவி அளித்து, பாதிக்கப்பட்ட காடுகளின் மறுசீரமைப்புத் திட்டத்தை செயல்படுத்துகிறது. தமிழகம் முழுவதும் இத்திட்டத்தின் கீழ் மொத்தம் ரூ.33.50 லட்சம் மரக்கன்றுகள் நடப்படும் எனவும், குறைவான அடர்த்தி கொண்ட வனப் பகுதிகள் மற்றும் நிலத்தடி நீரை மேம்படுத்துவதற்காக, முக்கியமான நீர்நிலைகளின் காடுகள், இந்த திட்டத்தின் கீழ் கண்டறியப்பட்டுள்ளன.

    தருமபுரி மாவட்டத்தில் உள்ள மொரப்பூர் வனச்சரகத்தில் 2023-24 ஆம் ஆண்டு இத்திட்டத்தின் கீழ் மர அடர்த்தி குறைந்த 700 ஹெக்டேர் காப்பு காடுகள் , பொம்மிடி அருகேயுள்ள கவரமலை காப்பு காட்டுப் பகுதியில் கண்டறிப்பட்டுள்ளது.

    இதில் ஆங்காங்கே அடர்த்தி குறைந்த பகுதிகளில் சீதா, தான்றி, வேங்கை, கள்ளச்சி, ,சிவப்பு, சந்தனம், தேக்கு, வேம்பு, புங்கன், புளி, நெல்லி உள்ளிட்ட 13 வகையான மரக்கன்றுகள் சுமார் 70 ஆயிரம் நடப்பட உள்ளது.

    வரும் ஜீன் - ஜீலை மாதத்தில் கன்றுகள் நடவுப் பணி தொடங்க உள்ளது.

    இத்திட்டத்தின் மூலம் வனப்பகுதியில் இன்னும் சில ஆண்டுகளில் மரங்களின் அடர்த்தி அதிகரிக்கும் வாய்புள்ளதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

    இதேபோல் அரூர் வனச்சரகம்,கோட்டப்பட்டி வனச்சரகம் உள்ளிட்ட வனசரகங்களிலும் இத்திட்டத்தின் கீழ் மரக்கன்றுகள நடப்பட உள்ளதாகவும், இதற்கான வனகாப்பு காடுகள் தேர்வு செய்யப்பட உள்ளதாகவும் வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். இதற்காக தற்போது வனத்துறையினரின் நர்சரிகளில் மரக்கன்றுகள் தயார் செய்யும் பணிகள் நடைப்பெற்று வருகின்றது.

    Next Story
    ×