என் மலர்
உள்ளூர் செய்திகள்

நாட்டார்மங்கலத்தில் மாரியம்மன் சுவாமி வீதி உலா
- நாட்டார்மங்கலத்தில் மாரியம்மன் சுவாமி வீதி உலா நடைபெற்றது
- ஆடி முதல் வெள்ளியை முன்னிட்டு நடந்தது
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா,நாட்டார்மங்கலம் கிராமத்தில் ஆடி முதல் வெள்ளியை முன்னிட்டு மாரியம்மன் சுவாமி திருவீதி உலா நிகழ்வு வெகு விமர்ச்சியாக நடைபெற்றது. இதல் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
ஆலத்தூர் தாலுகா நாட்டார்மங்கலம் கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோயிலில் ஆடி மாதம் முதல் வெள்ளியை முன்னிட்டு மாரியம்மன் சுவாமிக்கு சந்தனக்காப்பு அலங்காரத்துடன் சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடைபெற்றது. முன்னதாக செல்லியம்மன் சுவாமிக்கு சந்தனக்காப்பு அலங்காரத்துடன் சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடைபெற்றது.அதனையடுத்து மாரியம்மன் சுவாமி அலங்கரிக்கப்பட்ட குதிரை வாகனத்தில் திருவீதி உலா நடைபெற்றது. கிராம பொதுமக்கள் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்து வழிபாடு நடத்தினர். இதனை முன்னிட்டு மங்கள இசை மற்றும் வானவேடிக்கை நடைபெற்றது. பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அனைத்தும் நாட்டார்மங்கலம் கிராம பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் செய்திருந்தனர்.






