என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குன்னூரில் திடீர் மழை- குளிரால் பொதுமக்கள் அவதி
    X

    குன்னூரில் திடீர் மழை- குளிரால் பொதுமக்கள் அவதி

    • இரவில் குன்னூர் மற்றும் அதனை சுற்றியுள்ள வண்டிசோலை, கட்டபெட்டு, பர்லியார் உள்பட பல்வேறு இடங்களிலும் திடீரென மழை பெய்தது.
    • கடும் குளிரால் காலையில் வேலைக்கு செல்வோர், பள்ளி செல்லும் மாணவ, மாணவிகள் மிகவும் சிரமம் அடைந்துள்ளனர்.

    குன்னூர்:

    நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பகல் நேரங்களில் கடும் உறைபனி மற்றும் குளிர் நிலவி வருகிறது. இரவு நேரங்களில் மிதமான மழையும் பெய்து வருகிறது.

    குன்னூர் சுற்றுப்புற பகுதிகளில் நேற்று காலை வழக்கம் போல குளிர் நிலவியது. மதியத்திற்கு பிறகு வானில் மேக கூட்டங்கள் திரண்டு மழை பெய்வது போல் காணப்பட்டது. மாலையில் லேசான மழை பெய்தது.

    இரவில் குன்னூர் மற்றும் அதனை சுற்றியுள்ள வண்டிசோலை, கட்டபெட்டு, பர்லியார் உள்பட பல்வேறு இடங்களிலும் திடீரென மழை பெய்தது.

    லேசான மழையாக தொடங்கி பலத்த மழையாக கொட்டி தீர்த்தது. மழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

    தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கியது. மாவட்டத்தில் நிலவி வரும் கடும் குளிரால் காலையில் வேலைக்கு செல்வோர், பள்ளி செல்லும் மாணவ, மாணவிகள் மிகவும் சிரமம் அடைந்துள்ளனர்.

    கடும் குளிரில் இருந்து தப்பிக்க மக்கள் ஆங்காங்கே தீ மூட்டி குளிர் காய்வதையும் காணமுடிகிறது. நீலகிரியில் சீதோஷ்ண நிலை மாற்றத்தால் மக்களுக்கு உடல்நிலையும் பாதிக்கப்பட்டு வருகிறது. அதிகாலையில் கடும் பனி மூட்டம் நிலவுவதால் வாகன ஓட்டிகள் தங்கள் முகப்பு விளக்குகளை எரிய விட்டபடி செல்கின்றனர்.

    Next Story
    ×