என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  போலீஸ் தேர்வில் தேர்ச்சி பெற்ற  219 பேருக்கு தருமபுரி ஆயுதபடை மைதானத்தில் பயிற்சி
  X

  போலீஸ் தேர்வில் தேர்ச்சி பெற்ற 219 பேருக்கு தருமபுரி ஆயுதபடை மைதானத்தில் பயிற்சி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • தருமபுரி மாவட்டத்தில், 10 நாட்களில் சந்து கடைகளில் நடக்கும் மது விற்பனை முற்றிலும் தடுக்கப்படும்.
  • குட்கா கடத்தலை தடுக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

  தருமபுரி,

  தருமபுரி வெண்ணாம்பட்டி ஆயுத படை மைதானத்தில் காவலர் பயிற்சி பள்ளி இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில் சேலம் மாவட்டத்தை சேர்ந்த 219, காவலர்கள் பயிற்சி எடுத்து வந்தனர். கடந்த 7 மாதமாக இவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

  இதில் கவாத்து, வாரியார் கவாத்து, மற்றும் கரோத்தே, சிலம்பம், துப்பாக்கி சுடுதல், கம்ப்யூட்டர் பயிற்சி, நீச்சல் பயிற்சி, உள்ளிட்ட போட்டிகள் நடந்தன.

  இதில், முதல் மூன்று இடங்களை பிடித்த வர்களுக்கு ஐ.ஜி.,சுதாகர் மற்றும் தருமபுரி எஸ்.பி., கலைச்செல்வன் ஆகியோர் சான்றிதழ் மற்றும் பதக்கம் வழங்கி பாராட்டினார்கள்.

  இங்கு பயிற்சி பெற்ற அனைவரும் சிறந்த முறையில் பணியாற்றி காவல்துறைக்கும், தங்களது பெற்றோர்களுக்கும் பெருமை சேர்க்க வேண்டும். நீங்கள் அடுத்தடுத்த கட்டங்களுக்கு முன்னேறி செல்ல வேண்டும் என, ஐ.ஜி., அறிவுரை வழங்கினார்.

  அதை தொடர்ந்து அவர் கூறியதாவது:-

  முதல்வர் ஸ்டாலின் கஞ்சா இல்லாத தமிழக மாக்க கட்டளையிட்டுள்ளார். கோவை மண்டலத்தில் கஞ்சாவை ஒழிக்க, எங்கெங்கு கஞ்சா விற்கப்படுகிறது. யார் கஞ்சா விற்கிறார்கள் என, கண்டறியப்பட்டு வருகிறது.

  மேலும், கஞ்சா விற்பனையை ஒழிக்க ஒவ்வொரு மாவட்டத்திலும் பஞ்சாயத்து தலை வர்களுடான ஆலோசனை கூட்டம் நடத்தப்படுகிறது. தருமபுரி மாவட்டத்தில் பஞ்சாயத்து தலைவர்கள் உடனான கூட்டம் எஸ்.பி., கலைச்செல்வன் தலைமையில் நடத்தப்பட்டது.

  மண்டலத்தில் உள்ள தருமபுரி உட்பட அனைத்து மாவட்டங்களிலும் கஞ்சா விற்பனையை முற்றிலும் ஒழிக்க பஞ்சாயத்து அளவிலான குழுக்கள் அமைக்கப்பட உள்ளது. அதன் அடிப்படையில் கோவை மண்டலம் கஞ்சா இல்லாத பகுதியாக்கப்படும். தருமபுரி மாவட்டத்தில், 10 நாட்களில் சந்து கடைகளில் நடக்கும் மது விற்பனை முற்றிலும் தடுக்கப்படும்.

  குட்கா கடத்தலை தடுக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. தொப்பூர் பகுதியில் வாகனங்கள் மெதுவாக செல்வதால், இப்பகுதியில் குட்கா கடத்தல் வாகனங்கள் பிடிக்கப்படுகிறது. தருமபுரி மாவட்டத்தில் பணியாற்றினேன் என்ற வகையில் எனக்கு இது பெருமையாக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

  Next Story
  ×