என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஜாக்டோ ஜியோ அமைப்பினர் மனித சங்கிலி போராட்டம்
- புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.
- தருமபுரி மாவட்ட கலெக்டர் அலுவலகம் எதிரில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.
தருமபுரி,
புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் முதுநிலை ஆசிரியர்கள் ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தருமபுரி மாவட்ட கலெக்டர் அலுவலகம் எதிரில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.
இதில் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 1 கிலோ மீட்டர் தூரம் வரை மாவட்ட கலெக்டர் அலுவலகம், காவல் கண்காணிப்பாளர் அலுவலகம், தீயணைப்பு நிலைய அலுவலகம், செந்தில் நகர் வரை ஜாக்டோ ஜியோ அமைப்பினர் சுமார் 500-க்கும் மேற்பட்டோர் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Next Story