search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சென்னை விமான நிலையத்தில் அடுக்குமாடி வாகன நிறுத்தம் திறப்பு தாமதமாகிறது
    X

    சென்னை விமான நிலையத்தில் அடுக்குமாடி வாகன நிறுத்தம் திறப்பு தாமதமாகிறது

    • புதிய நிறுவனம் வேலைக்கு எடுத்துக் கொள்ள முன்வர வில்லை என்ற கூறப்படுகிறது.
    • வாகன நிறுத்தும் இடங்களில் ஊழியர்களை பணிய மர்த்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

    ஆலந்தூர்:

    சென்னை விமான நிலையத்தின் முன்பகுதியில் 3.36 லட்சம் சதுர மீட்டரில், ரூ.250 கோடியில், 6 அடுக்குகள் கொண்ட அடுக்குமாடி வாகன நிறுத்தம் கட்டப்பட்டு உள்ளது.

    இந்த வளாகத்தில் ஒரேநேரத்தில் 2,200 கார்கள் வரை நிறுத்தமுடியும். மேலும் அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்படாத வகையில் பல்வேறு நவீன வசதிகளும் செய்யப்பட்டு உள்ளன.

    இந்த அடுக்குமாடி கார் நிறுத்தத்தில் இருந்து விமான நிலையத்திற்கு நடந்து செல்லும் வகையில், இணைப்பு மேம்பாலமும் அமைக்கப்பட்டுள்ளது.

    இந்த பணிகள் முழுவதும் முடிந்து வருகிற 1-ந்தேதி திறப்பு விழா நடைபெற்று பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இதில், வாகனங்களை நிறுத்த அரை மணி நேரத்திற்கு ரூ.75 கட்டணம் வசூலிக்கலாம் என திட்டமிடப்பட்டு இருந்தது.

    இந்த நிலையில் பல்வேறு காரணங்களால் இந்த அடுக்குமாடி கார் நிறுத்தும் இடம் திறப்பு தாமதமாகும் என்று தெரிகிறது. அடுக்கு மாடி வாகன நிறுத்தத்துக்கு தீயணைப்புத் துறையில் இருந்து தடையில்லா சான்றிதழ் கிடைப்பதிலும் தாமதம் ஏற்பட்டுள்ளதாக கூறுப்படுகிறது.

    இதுகுறித்து சென்னை விமான நிலைய அதிகாரிகள் கூறும்போது, ஏற்கனவே, கார் மற்றும் மோட்டார் சைக்கிள்களை நிறுத்துவதற்காக ஒப்பந்தப் பணிகளை எடுத்த நிறுவனங்களில் 123 பேர் வேலை பார்த்து வருகின்றனர். இவர்களை, புதிய நிறுவனம் வேலைக்கு எடுத்துக் கொள்ள முன்வர வில்லை என்ற கூறப்படுகிறது.

    இதனால் இதில், பணியாற்றும் ஊழியர்கள், புதிய நிறுவனத்தில் தங்களை பணியமர்த்த உத்தரவிடக் கோரி, கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து உள்ளனர். அடுத்த விசாரணை வரும் வரை, தற்போதைய நிலை தொடர நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது.

    எனவே வாகன நிறுத்தும் இடங்களில் ஊழியர்களை பணிய மர்த்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

    தீயணைப்புத் துறையில் இருந்து தடையில்லா சான்றிதழ் கிடைப்பதிலும் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால் புதிய அடுக்குமாடி வாகன நிறுத்தம் திறப்பது தாமதமாகி உள்ளது என்றார்.

    Next Story
    ×