search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருவேற்காடு பகுதியில் கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்ய ஆட்களை பயன்படுத்தினால் நடவடிக்கை- நகராட்சி ஆணையர் எச்சரிக்கை
    X

    திருவேற்காடு பகுதியில் கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்ய ஆட்களை பயன்படுத்தினால் நடவடிக்கை- நகராட்சி ஆணையர் எச்சரிக்கை

    • நகராட்சி வாகனம் அல்லது நகராட்சியில் உரிமம் பெற்ற வாகனங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
    • மீறினால் இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை அல்லது ரூ.2 லட்சம் அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படும்.

    பூந்தமல்லி:

    திருவேற்காடு நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்வதற்கு மனிதர்களை பயன்படுத்தினால் இரண்டு ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் என்று நகராட்சி நிர்வாகம் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. இது குறித்து நகராட்சி ஆணையர் ஜஹாங்கீர் பாஷா கூறியதாவது:-

    திருவேற்காடு நகராட்சி பகுதியில் வீடுகள், வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகளில் கழிவுநீர் தொட்டிகளை சுத்தம் செய்வதற்கு நகராட்சி வாகனம் அல்லது நகராட்சியில் உரிமம் பெற்ற வாகனங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

    இந்த சேவையை பெற 14420 என்ற கட்டணமில்லா தொலைபேசி உதவி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். மனிதக் கழிவுகளை அகற்றும் தொழில்புரிவோர் தடுப்பு மற்றும் அவர்களது மறுவாழ்வு சட்டத்தின் படி, எக்காரணம் கொண்டும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ மனிதர்களை கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்வதற்கு பயன்படுத்தக் கூடாது.

    இதனை மீறினால் இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை அல்லது ரூ.2 லட்சம் அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படும். 2-வது முறையும் தவறு செய்தால் 5 ஆண்டுகள் சிறை தண்டனை அல்லது ரூ.5 லட்சம் அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படும் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் போது உயிரிழப்பு ஏற்பட்டால் தொழிலாளியின் குடும்பத்திற்கு தொடர்புடைய உரிமையாளர் ரூ .10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×